சசிகலா புஷ்பா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை

1470983590-4847

மதுரை: மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் திசையன்விளையை அடுத்த ஆணைக்குடியை சேர்ந்த இளம்பெண் பானுமதியும், அவரது சகோதரி ஜான்சிராணியும், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தனர். அதில் தாங்கள் சசிகலா புஷ்பா வீட்டில் வேலை பார்த்து வந்தபோது அவரது கணவர் லிங்கேஸ்வரர், மகன் பிரதீப் ஆகியோர் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிவித்திருந்தனர்.

மேலும் சசிகலா புஷ்பாவும், அவரது தாயார் கௌரியும் தகாத வார்த்தைகளால் பேசி, அடித்து துன்புறுத்தியதாகவும் மனுவில் தெரிவித்திருந்தனர். இதன் அடிப்படையில் விசாரணை செய்த ஆய்வாளர், சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர், மகன் உள்ளிட்டோர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது சசிகலா புஷ்பா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை நிராகரித்தது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>