சசிகலா புஷ்பாவுக்கு கூடுதல் பாதுகாப்பு: தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

சசிகலா புஷ்பாவுக்கு கூடுதல் பாதுகாப்பு: தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

சசிகலா புஷ்பாவுக்கு கூடுதல் பாதுகாப்பு: தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

புது தில்லி: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பாவுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, தனக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே. பாதக் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி, தில்லியில் உள்ள அரசு பங்களாவில் இருந்து தினமும் நாடாளுமன்றம் சென்று வர சசிகலா புஷ்பாவுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தில்லி காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார்.

சசிகலா புஷ்பாவுக்கு பாதுகாப்பு வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், தில்லி அரசு, தில்லி மாநகராட்சி, தில்லி காவல்துறை ஆணையர் ஆகியோர் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை நவம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எனது உயிருக்கு அச்சுறுத்தல் நீடிப்பதால், சுதந்திரமாக நாடாளுமன்ற கடமைகளை ஆற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், எனக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால், எனது பாதுகாப்பு அதிகரிக்கப்படவில்லை. எனவே, கூடுதல் பாதுகாப்பு வழங்க தில்லி காவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் என்று சசிகலா புஷ்பா தாக்கல் செய்திருந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>