சசிகலா புஷ்பாவின் பதவி பறிபோகுமா?

சசிகலா புஷ்பாவின் பதவி பறிபோகுமா?

சசிகலா புஷ்பாவின் பதவி பறிபோகுமா?

புது தில்லி: ஒரு கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்.பி., கட்சிக் கொறடாவின் வார்த்தையை மீறலாமா? அவ்வாறு மீறினால் அவரது பதவி பறிக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கட்சித் தாவல் தடைச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

இதனால், சசிகலா புஷ்பாவின் பதவி பறிபோகுமா என்ற கேள்விக்கு நாம் 1996ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டியதிருக்கும்.

2010ம் ஆண்டு சமாஜ்வாடிக் கட்சியில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் அமர்சிங் நீக்கப்பட்டார். மக்களவை உறுப்பினர் ஜெயப்பிரதாவும் நீக்கப்பட்டார்.

இதையடுத்து, தங்களது பதவிக்காலம் முடியும் வரை தங்களை பதவியில் இருந்து நீக்கக் கூடாது என்று கோரி இருவரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

ஆனால், தற்போது இருவரது பதவிக்காலமும் முடிந்துவிட்டதால் வழக்கை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம், அமர்சிங், ஜெயபிரதா ஆகியோரது மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கட்சித் தாவல் தடை சட்டம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதால், தற்போது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சசிகலா புஷ்பா விவகாரத்தில் இதே கேள்வி எழுந்துள்ளது.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கட்சிக் கொறடாவின் வார்த்தையை மீறலாமா? அவ்வாறு கட்சிக் கொறடாவின் வார்த்தையை மீறினால் பதவியை இழக்க நேரிடுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

அதே சமயம், 1996ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட விஸ்வநாதன் வழக்கின் அடிப்படையில் சசிகலா புஷ்பாவின் எம்.பி. பதவி பறி போக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>