கோவில்களில் 10 லட்சம் கோடி கொள்ளை

இந்து கோவில்களில் இதுவரை 10லட்சம் கோடி கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு…

பிஷப் கால்டுவெல் – பிழையுறையும் பொய்யுரையும்(திராவிட இனவாதமும்) என்ற புத்தக வெளியிட்டு விழா சென்னை தி.நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது,
இதில் பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்,பின்னர் மேடையில் பேசி அவர்:

தமிழகத்தில் 70 ஆண்டுகளாக தமிழ் இளைஞர்கள் மூளையை குப்பை தொட்டியாக்கும் முயற்சியில் ஒரு கும்பல் வெற்றி பெற்றுவிட்டது.h.raja_jakkamma

தமிழை மறைப்பதற்காக திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்தினர்.
உலகத்திலேயே எல்லா மொழியையும் அழிக்கும் முயற்சியில் கிறித்தவ பாதிரியார்கள் ஈடுபட்டனர்.

ஆச்சாரத்தை தீண்டாமையாக திராவிட இயக்கத்தினர் சித்தரித்தனர்,ஜி.யு.போப் வள்ளுவரை கிறித்தவர் என்கிறார்.

வைரமுத்து இதுவரை 13 பொய்யான கட்டுரைகளை எழுது உள்ளார்,அதனால் அவர் கட்டுரைக்கு எதிராக சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தினேன்.பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா செய்தது போல்.

இந்து கோவில்களின் வருமானம் இதுவரை 10லட்சம் கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அறநிலை துறையில் எள்ளவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை,ஒட்டுமொத்த அறநிலை துறையும் தூர்வாரப்பட வேண்டும்என்று கூறினார்

தூத்துக்குடி கலவரத்திற்கு காரணம் மாதா கோவிலில் மணி அடித்து ஜெகத் கஸ்பர் என்ற பாதிரியார் பேரணியாக செல்ல செய்த தூண்டுதல்தான்,அவர் மீது நாங்கள் புகார் அளித்து உள்ளோம்,உரிய நடவடிக்கை எடுப்போம்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>