கோவா முதல் மந்திரியாக மனோகர் பாரிக்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவா முதல் மந்திரியாக மனோகர் பாரிக்கர் நியமிக்கப்பட்டுள்ளார். 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

கோவா முதல் மந்திரியாக மனோகர் பாரிக்கர் நியமிக்கப்பட்டுள்ளார். 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

கோவாவில், ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் முதல்-மந்திரி ஆவதற்கு பாரதீய ஜனதா கட்சி ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து அவர் மாநில கவர்னர் மிருதுளா சின்காவை சந்தித்து, தனக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை கவர்னரிடம் கொடுத்து தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமை கோரினார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் கோவா முதல்-மந்திரியாக மனோகர் பாரிக்கரை நியமனம் செய்து, அவரை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்து கவர்னர் உத்தரவிட்டார். இதுதொடர்பாக கவர்னரின் செயலாளர் ரூபேஷ் குமார் தாகூர் அவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பாரதீய ஜனதா கட்சி சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மனோகர் பாரிக்கரை முதல்-மந்திரியாக கவர்னர் நியமனம் செய்து உள்ளார். அவர் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் மெஜாரிட்டியை சட்டசபையில் 15 நாட்களுக்குள் நிரூபிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவித்து உள்ளார்.

கவர்னரிடம் மனோகர் பாரிக்கர் அளித்த ஆதரவு எம்.எல்.ஏக்கள் பட்டியில் பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் 13 பேர், மராட்டியவாடி கோமந்த கட்சி எம்.எல்.ஏ.க்கள் 3 பேர், கோவா பார்வர்டு கட்சி எம்.எல்.ஏக்கள் 3 பேர் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் என மொத்தம் 21 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவிப்பதற்கான பட்டியலை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.,கவர்னர் அழைப்பை தொடர்ந்து கோவா மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>