கோயில் பணத்திலேயே மசூதியை சீரமைத்து தரும் அயோத்தியில் ஹனுமன்கர்ஹி கோயில் நிர்வாகம்

கடந்த 17ம் நூற்றாண்டில் முகாலய மன்னர் அவுரங்கசீப் காலத்தில் இந்த ஆலம்கிரி மசூதி கட்டப்பட்டுள்ளது. மசூதியின் இடம் அர்கரா என்ற பகுதியில் அமைந்துள்ளது. 1765ம் ஆண்டு ஷூஜாதுல்லா நவாப், மசூதியில் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கட்டாயத்துடன் இந்த இடத்தை ஹனுமன்கர்ஹி கோயிலுக்கு தானமாக வழங்கியுள்ளார்.

கடந்த 17ம் நூற்றாண்டில் முகாலய மன்னர் அவுரங்கசீப் காலத்தில் இந்த ஆலம்கிரி மசூதி கட்டப்பட்டுள்ளது. மசூதியின் இடம் அர்கரா என்ற பகுதியில் அமைந்துள்ளது. 1765ம் ஆண்டு ஷூஜாதுல்லா நவாப், மசூதியில் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கட்டாயத்துடன் இந்த இடத்தை ஹனுமன்கர்ஹி கோயிலுக்கு தானமாக வழங்கியுள்ளார்.

அயோத்தியா: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சுமார் 24 ஆண்டுகளுக்கு முன் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக இன்றளவும் மதக்கலவரங்கள் நடக்கின்றன. இந்நிலையில் அயோத்தியில் இந்துக்களின் ஹனுமன்கர்ஹி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பாழடைந்த ஆலம்கிரி மசூதி உள்ளது. 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த மசூதியின் கட்டிடங்கள் வலுவிழந்து காணப்பட்டதால் இங்கு செல்வதற்கு அயோத்தி மாநகராட்சி தடை விதித்திருந்தது.

கடந்த 17ம் நூற்றாண்டில் முகாலய மன்னர் அவுரங்கசீப் காலத்தில் இந்த ஆலம்கிரி மசூதி கட்டப்பட்டுள்ளது. மசூதியின் இடம் அர்கரா என்ற பகுதியில் அமைந்துள்ளது. 1765ம் ஆண்டு ஷூஜாதுல்லா நவாப், மசூதியில் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கட்டாயத்துடன் இந்த இடத்தை ஹனுமன்கர்ஹி கோயிலுக்கு தானமாக வழங்கியுள்ளார்.அதன்படி ஆலம்கரி மசூதியில் தொடர்ந்து தொழுகை நடந்து வந்துள்ளது. மசூதி மறுசீரமைக்கப்படாததால் தொழுகை நடத்துவது படிப்படியாக குறைந்து வந்துள்ளது. இதனால் மசூதி பாழடைந்ததோடு, பாதுகாப்பற்ற சூழல் நிலவியுள்ளது. இதன் காரணமாக மாநகராட்சி அங்கு செல்ல சமீபத்தில் தடை விதித்தது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் ஹனுமன்கர்ஹி கோயிலின் தலைமை நிர்வாகியை சந்தித்து மசூதியை சீரமைக்க அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

இது தொடர்பாக கோயிலின் தலைமை நிர்வாகி கூறுகையில், “கோயில் பணத்திலேயே மசூதியை சீரமைத்து தருவதாக இஸ்லாமிய சகோதரர்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மசூதியில் தொழுகை நடத்துவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று சான்றிதழ் தருவதாக கூறியுள்ளோம்” என்றார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>