கோயம்பேடு பஸ் நிலையம் எதிரில்போலீசாரின்அலட்சியத்தால் வாலிபர்உயிரிழந்தார்.

கோயம்பேடு பஸ் நிலையம் எதிரில்போலீசாரின்அலட்சியத்தால் வாலிபர்உயிரிழந்தார்.

கோயம்பேடு பஸ் நிலையம் எதிரில்போலீசாரின்அலட்சியத்தால் வாலிபர்உயிரிழந்தார்.

அண்ணாநகர்: கோயம்பேடு பஸ் நிலையம் எதிரே உள்ள சிக்னலில் கழுத்து அறுத்து வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேடு பஸ் நிலைய நுழைவுவாயில் எதிரே சிக்னல் உள்ளது. நேற்றிரவு சிக்னலுக்காக ஏராளமான வண்டிகள் காத்திருந்தன. அப்போது சிக்னலையொட்டி உள்ள சென்டர் மீடியன் பகுதியில் ரத்தவெள்ளத்தில் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அப்பகுதியில் மக்கள் திரண்டதால் பரபரப்பு உருவானது. இதனால் அப்பகுதியினர் அங்கிருந்த போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சென்று பார்த்துவிட்டு, இவர் விபத்தில் காயம் அடையவில்லை. வெட்டுக் காயம் உள்ளது. எனவே, சட்டம், ஒழுங்கு போலீசார்தான் விசாரிக்க வேண்டும் என்று அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இதையடுத்து, சட்டம், ஒழுங்கு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் உயிருக்கு போராடிய வாலிபரை மீட்டு, ரோட்டின் ஓரமாக வைத்துவிட்டு விசாரணை நடத்தியுள்ளனர். இதனிடையே அந்த வாலிபர் உயிரிழந்தார். இதையடுத்து, உடலை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர். வாலிபரின் பின் கழுத்து கத்தியால் அறுக்கப்பட்டுள்ளது. உடல் முழுவதும் காயங்கள் உள்ளது. எனவே, அவரை கொலை செய்து வீசியிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அவரது சட்டை பாக்கெட்டில் 20 ரூபாயும் கஞ்சா பொட்டலமும் இருந்தது. பேன்ட், சட்டை அணிந்துள்ளார்.
கஞ்சா பொட்டலம் வைத்திருந்ததால் கஞ்சா வியாபாரியாக இருக்கலாம். தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகின்றனர்.

இதுபற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொலை செய்யப்பட்ட வாலிபர் யார் என்று விசாரிக்கின்றனர். 24 மணி நேரமும் போக்குவரத்துடன் பரபரப்பாக இயங்கும் கோயம்பேடு பஸ் நிலைய சிக்னலில் வாலிபர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டிருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>