கோடநாடு காவலாளி கொலையில் அடுத்த பரபரப்பு : ஜெயலலிதா கார் டிரைவர் மர்மசாவு

PicsArt_04-30-01.24.26

சென்னை : கோடநாடு காவலாளி கொலைவழக்கில் விசாரிக்கப்பட்டு வந்த ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் முன்னாள் கார் டிரைவர் விபத்தில் பலியான சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது சாவில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், போலீசாரால் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் விபத்தில் படுகாயமடைந்து கவலைக்கிடமாக உள்ளார். அவருடன் சென்ற மனைவி, மகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அடுத்தடுத்து ஒரே நாளில் 2 விபத்துகள் நடந்த சம்பவத்தால் கோடநாடு விவகாரத்தில் தொடர் பீதி நிலவுகிறது.
சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே, சமுத்திரம் சித்திரபாளையம் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (35). இவர், சென்னை வடபழனியில் தங்கியிருந்து கார் ஓட்டி வந்தார். சொந்த ஊருக்கு வந்திருந்த கனகராஜ், நேற்று முன்தினம் காலை, ஆத்தூர் சக்தி நகரில் உள்ள தனது சித்தி மகன் ரமேஷ் வீட்டிற்கு சென்று அவரது குழந்தையை பார்த்துவிட்டு, பொருட்கள் வாங்குவதற்காக, ஆத்தூர் டவுனுக்கு இரவில் பைக்கில் சென்றுள்ளார்.
முன்னாள் முதல்வரின் கார் டிரைவர்: சென்னை-சேலம் பைபாஸ் சாலையில் சந்தனகிரி பிரிவு ரோட்டில் கனகராஜ் வந்தபோது, சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வேகமாக சென்ற கார், பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கனகராஜ், சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்ததும், ஆத்தூர் இன்ஸ்பெக்டர் பாஸ்கர்பாபு தலைமையிலான போலீசார், சடலத்தை கைப்பற்றி ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். விபத்து தொடர்பாக, தம்மம்பட்டியை சேர்ந்த கார் டிரைவர் ரபீக் (25) என்பவரை கைது செய்தனர். பெங்களூரில் சாப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றும் மல்லிகா என்பவரை, தனது காரில் பெரம்பலூருக்கு அழைத்துச் சென்றதாகவும், அப்போது சந்தனகிரி பிரிவு ரோட்டில் எதிரே, பைக்கில் வந்த கனகராஜ் மீது, கார் மோதியதாகவும் போலீசாரிடம் ரபீக் தெரிவித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் ேதாட்ட இல்லத்திலும், ேகாடநாடு எஸ்டேட் பங்களாவிலும், கனகராஜ் டிரைவராக பணியாற்றி உள்ளார். சமீபத்தில், எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக நீலகிரி தனிப்படை போலீசார், கனகராஜிடம் விசாரணை நடத்தியுள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தவும் முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கனகராஜ் விபத்தில் இறந்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில், கனகராஜின் அண்ணனும், சேலம் புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற முன்னாள் துணை செயலாளருமான தனபால், போலீசில் ஒரு புகார் தெரிவித்துள்ளார்.

எடப்பாடிதான் காரணம்: பின்னர், தனபால் கூறியதாவது: எனது தம்பி கனகராஜ், 2008ம் ஆண்டு இறுதியில் போயஸ் கார்டனில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது, அதிமுக மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த சமுத்திரம் சரவணன்தான், அவரை வேலைக்கு சேர்த்து விட்டார். நாங்களும், முதல்வராக இருக்கும் எடப்பாடியும் பங்காளி குடும்பம். சென்னை போயஸ் தோட்டத்தில், மறைந்த முதல்வர் ெஜயலலிதா வீட்டிலும், கோட நாட்டிலும் கார் டிரைவராக கனகராஜ் பணியாற்றினார். 2 ஆண்டுக்கு முன்பு, கலைவாணி என்ற பெண்ணை கனகராஜ், காதல் திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. கடந்த 2014ம் ஆண்டு கனகராஜ் போயஸ் கார்டனில் இருந்து வெளியே வந்தார். தற்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் நிர்ப்பந்தத்தால்தான், கனகராஜ் டிரைவர் பணியில் இருந்து விலகினார். ஆத்தூர் அரசு மருத்துவமனையில் உள்ள அவரது சடலத்தை, பிரேத பரிசோதனை செய்து உடலை ஒப்படைக்க, போலீசார் காலம் தாழ்த்தி வருகின்றனர். யாருடைய நிர்பந்தத்தால் இது நடக்கிறது என்று தெரியவில்லை. விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்த்தேன். அங்கு விபத்து நடப்பதற்கான வாய்ப்பே இல்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பெரும் போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு தனபால் தெரிவித்தார்.

இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது. கேரள விபத்து: கோடநாடு கொலையில் தேடப்பட்டு வந்த இன்னொருவர் கேரளாவை சேர்ந்த சயான் (33). இவர் தலைமறைவாக இருந்தார். அவர் தனது மனைவி வினுப்ரியா (30), மகள் நீது (5) ஆகியோருடன், மனைவியின் சொந்த ஊரான கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் இரிஞ்ஞாலக்குடா நோக்கி நேற்று அதிகாலை காரில் சென்றுகொண்டிருந்தார். காரை, சயான் ஓட்டியுள்ளார். முன்புறம் மனைவி மற்றும் மகள் இருந்தனர். கார், பாலக்காடு அருகே கண்ணாடி பாத்திக்கல் என்ற இடத்தில் சென்றபோது, ரோட்டோரம் நின்ற லாரி மீது மோதியது. இதில், வினுப்ரியா (30), மகள் நீது (5) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மார்பில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் சயான் உயிருக்கு போராடினார். அவரை போலீசார் மீட்டு, கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து பற்றி பாலக்காடு தெற்கு போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரிக்கின்றனர்.

படுகாயம் அடைந்த சயான், கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் வசிக்கிறார். குனியமுத்தூரில் உள்ள ஒரு பேக்கரியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு ஒரு சகோதரி உள்ளார். தனது மனைவி, குழந்தைகளை மாமனார் வீட்டில் விட்டுவிட்டு, வேறு பகுதிக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டார். போலீசார் தேடுவதை அறிந்து, அவசரமாக தப்பிச்செல்ல முயன்றபோது விபத்தில் சிக்கி, மனைவி, மகளை இழந்துவிட்டார். இவரது நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளது. ரகசிய வாக்குமூலம்: சயான் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு, ேகாவை ஜே.எம். எண் 5 மாஜிஸ்திரேட் செல்வக்குமார் நேரில் சென்றார். விபத்து தொடர்பாக சயானிடம் சில நிமிடம் வாக்குமூலம் பெற்றார். சயான் சிகிச்சை பெறும் வார்டில் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சயானை சந்திக்க அவரது அக்கா கணவர் மட்டும் வந்துள்ளார். மற்ற யாரும் அவரை காண வரவில்லை. போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை தொடர்பாக போலீசார் தேடி வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் டிரைவரான சேலம் ஆத்தூரை சேர்ந்த கனகராஜ் (35) நேற்று முன்தினம் இரவு கார் மோதிய விபத்தில் சேலத்தில் இறந்தார். மற்றொரு குற்றவாளியான சயான் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி வருகிறார். ஜெயலலிதாவிற்கு மிகவும் பிடித்த இடமான கோடநாடு எஸ்ேடட்டில் பல ரகசியங்கள், ஆவணங்கள் இருப்பதாகவும், இதை கடத்திச்செல்ல திட்டமிட்ட குற்றவாளிகள் ஒரே நேரத்தில் விபத்தில் சிக்கியிருப்பதால் இந்த விவகாரத்தில் பரபரப்பு நிலவுகிறது. இதனிடையே, கைது செய்யப்பட்ட கேரளாவை சேர்ந்த சதீசன், தீபு, சந்தோஷ் மற்றும் உதயகுமார் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் விரட்டியதால் விபத்தா?

கோடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொலை வழக்கில் நீலகிரி தனிப்படை ேபாலீசார், கனகராஜை தேடி சேலம் வந்துள்ளனர். ஆத்தூரில் இருந்தவரை போலீசார், பின் ெதாடர்ந்ததாகவும் அப்போது கனகராஜ் விபத்தில் சிக்கியதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>