கைஇருப்பில் ரூ.15 லட்சத்துக்கு மேல் வைத்திருக்கக்கூடாது ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்க பரிவர்த்தனைக்கு தடை கருப்பு பணத்தை கட்டுப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு சிபாரிசு

கைஇருப்பில் ரூ.15 லட்சத்துக்கு மேல் வைத்திருக்கக்கூடாது ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்க பரிவர்த்தனைக்கு தடை கருப்பு பணத்தை கட்டுப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு சிபாரிசு

கைஇருப்பில் ரூ.15 லட்சத்துக்கு மேல் வைத்திருக்கக்கூடாது ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்க பரிவர்த்தனைக்கு தடை கருப்பு பணத்தை கட்டுப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு சிபாரிசு

துடெல்லி,

கருப்பு பணத்தை கட்டுப்படுத்த ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்க பரிவர்த்தனைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், தனிநபர்கள் ரூ.15 லட்சத்துக்கு மேல் கைஇருப்பில் வைத்திருக்கக்கூடாது என்றும் சிறப்பு புலனாய்வு குழு சிபாரிசு செய்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை
கருப்பு பணத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில், சிறப்பு புலனாய்வு குழுவை மத்திய அரசு அமைத்தது. ஓய்வு பெற்ற நீதிபதி எம்.பி.ஷா தலைமையிலான இக்குழு, கருப்பு பணத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றிய தனது 5–வது அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.

அதில், சிறப்பு புலனாய்வு குழு கூறியுள்ள சிபாரிசுகள் வருமாறு:–

கணக்கில் காட்டப்படாத பணம், ரொக்கமாக பதுக்கி வைத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு முடிவு கட்ட, பல்வேறு நாடுகளில் உள்ள சட்டங்கள், கோர்ட்டுகள் தெரிவித்த கருத்துகள் அடிப்படையில், ரொக்க பரிவர்த்தனைக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்று கருதுகிறோம்.

அந்தவகையில், ரூ.3 லட்சத்துக்கு மேற்பட்ட ரொக்க பரிவர்த்தனைக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும். அத்தகைய ரொக்க பரிவர்த்தனை சட்டவிரோதமானது மற்றும் சட்டப்படி தண்டனைக்குரியது என்று சட்டம் கொண்டுவர வேண்டும்.

ரூ.15 லட்சம்
நாட்டில் அவ்வப்போது பெருமளவு கருப்பு பணம் கைப்பற்றப்பட்டு வருவதை பார்க்கும்போது, கைஇருப்பு ரொக்கத்துக்கு உச்சவரம்பு நிர்ணயித்தால்தான், ரொக்க பரிவர்த்தனைக்கு தடை விதிப்பதை வெற்றிகரமாக அமல்படுத்த முடியும்.

எனவே, ரூ.15 லட்சத்துக்கு மேல் கைஇருப்பில் வைத்திருக்க தடை விதிக்க வேண்டும். அதற்கு மேற்பட்ட தொகையை தனிநபரோ, கம்பெனியோ வைத்திருக்க விரும்பினால், அவர்களது பகுதிக்கான வருமான வரி ஆணையரிடம் தேவையான முன்அனுமதியை பெற வேண்டும்.

இவ்வாறு அந்த சிபாரிசுகளில் கூறப்பட்டுள்ளது.

கருப்பு பணத்தில் வரி செலுத்தக்கூடாது
இதற்கிடையே, தாங்களாக முன்வந்து கருப்பு பண விவரத்தை அளிப்பதற்கான திட்டம் குறித்த சந்தேகங்களுக்கு வருமான வரித்துறை நேற்று 4–வது தடவையாக விளக்கம் அளித்தது.

கருப்பு பண மதிப்புக்கு, 30 சதவீத வரியும், 7.5 சதவீத கூடுதல் வரியும், 7.5 சதவீத அபராதமும் என மொத்தம் 45 சதவீத வரி விதிக்கப்படுகிறது. ஆனால், பிரகடனம் செய்த கருப்பு பணம் போக, பிரகடனம் செய்யாத இதர கருப்பு பணத்தில் இருந்து மேற்கண்ட 45 சதவீத வரியை செலுத்தக்கூடாது என்று அந்த விளக்கத்தில் வருமான வரித்துறை கூறியுள்ளது. அப்படி செய்பவர்களுக்கு சட்ட பாதுகாப்பு கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், கருப்பு பண பிரகடனத்தை தவறு இல்லாமல் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அப்படி தவறு இருந்தால், அதை திருத்தம் செய்வதற்கு நிபந்தனையுடன்தான் அனுமதி வழங்கப்படும் என்றும் வருமான வரித்துறை கூறியுள்ளது. அதாவது, முதலில் தாக்கல் செய்த பிரகடனத்தில் உள்ள கருப்பு பண தொகைக்கு குறையாத அளவுக்கு தொகையை காட்டுவதாக இருந்தால்தான், திருத்தம் செய்ய அனுமதிக்கப்படும் என்று கூறியுள்ளது.

வரி செலுத்த அவகாசம் நீட்டிப்பு
மேலும், 45 சதவீத வரி மற்றும் அபராதத்தை வருகிற நவம்பர் 30–ந்தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று ஏற்கனவே விதிக்கப்பட்ட காலக்கெடுவை அடுத்த ஆண்டு செப்டம்பர் 30–ந் தேதிவரை மத்திய அரசு நேற்று நீட்டித்தது. ஏற்கனவே விதிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் வரியை செலுத்துவதில் உள்ள சிரமங்கள் குறித்து பல்வேறு தரப்பினரும், தொழில், வர்த்தக அமைப்புகளும் முறையிட்டதால், மத்திய அரசு இந்த சலுகையை அளித்துள்ளது.

இதன்படி, செலுத்த வேண்டிய வரி மற்றும் அபராதத்தில், 25 சதவீதத்தை நவம்பர் மாதத்துக்குள்ளும், இன்னொரு 25 சதவீத தொகையை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள்ளும், மீதி 50 சதவீத தொகையை அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள்ளும் செலுத்த வேண்டும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>