கோலிவுட்டில் பெருகும் வெளிநாட்டு நடிகர்கள்

Kollywood-news-1628931

கோலிவுட்டில் வில்லன் பற்றாக்குறை நிலவுகிறது. வில்லனாக நடித்து வந்த பிரகாஷ்ராஜ் முதல் இன்னும் சிலர், குணசித்ர வேடங்களில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த குறையை போக்க பாலிவுட் நடிகர்களை வில்லனாக அழைத்து வருகின்றனர். அதை தாண்டி வெளிநாட்டு நடிகர்களையும் வில்லனாக்குகின்றனர். ரஜினியின் கபாலி படத்தில் மலேசியா நடிகர்கள் நடித்தனர். ஜெயம் ரவி நடித்த பூலோகம் படத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த குத்து சண்டை வீரர் நாதன் ஜோன்ஸ், பேராண்மை படத்தில் ஆஸ்ட்ரியாவை சேர்ந்த பாடிபில்டர் ரோலன்ட் நடித்தனர்.

அடுத்து ஜெயம் ரவி நடிக்கும் புதியபடம் டிக் டிக் டிக். இப்படத்துக்கு சிங்கப்பூர் நடிகர் ஆரோ அசீஸ் வில்லனாக ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். மிருதன் படத்தை இயக்கிய சக்தி சவுந்தர்ராஜன் இயக்குகிறார். தமிழ் படத்தில் நடிக்க வந்ததுபற்றி ஆரோ அசீஸ் கூறும்போது,‘இந்தியாவின் முதல் விண்வெளி கதை என்று கேட்டவுடன் ஆர்வம் தொற்றிக்கொண்டது. எனது கதாபாத்திரம்தான் இந்த வாய்ப்பை ஏற்றதற்கு காரணம்’ என்றார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>