கேரள, தமிழக, மத்திய அரசுகளை கண்டித்து பவானி தடுப்பணை தடுப்புக்குழு சென்னிமலையில் உண்ணாவிரதம்

unnamed (1)

ஈரோடு: பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி வரும் கேரள அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், தடுப்பணை கட்டுவதற்கு தடையாணை பெறாத தமிழக அரசை கண்டித்தும் பவானி தடுப்பணை தடுப்புக்குழு மற்றும் கீழ்பவானி பாசனத்துக்குட்பட்ட எல்-9, 10 மற்றும் 11 பாசன சபையை சேர்ந்த விவசாயிகள், சென்னிமலை பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், பாமக மற்றும் விவசாய சங்க மாநில பொது செயலாளர் ராஜன், கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்க தலைவர் நல்லசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரதத்தில் பவானி தடுப்பணை தடுப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பொன்னையன் பேசியதாவது: டெல்லியில், வறட்சி நிவாரணம் வழங்க கோரி போராடி வரும் தமிழக விவசாயிகளை பிரதமர் மோடி சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது தொடர்பாக அமைச்சர்களும், துறை அதிகாரிகளும் சுப்ரீம் கோர்ட்டில் போதிய ஆவணங்களை தாக்கல் செய்து தடையாணை பெற தவறி விட்டனர். பவானி ஆற்றுநீர் பறி போகும் அபாயம் உள்ளதால் தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் தமிழக விவசாயிகளின் நலனை காக்கும் வகையில் செயல்பட வேண்டியது அவசியம். இவ்வாறு பொன்னையன் பேசினார். கோவை: கேரளாவில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோவையில் நேற்று பல்வேறு கட்சியினர் பங்கேற்ற உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில், தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மீனாலோகு (திமுக), அமுதா (அதிமுக), ஜவஹர் (தமாகா), ரமேஷ், வடிவேல் (கொமதேக), செல்லமுத்து (உஉக), மணி (கொஜக) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>