கேஜ்ரிவாலின் திருடுபோன கார் கண்டுபிடிக்கப்பட்டது

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் திருடுபோன கார் அக்.14 ம் தேதி காலை காஸியாபாத்தில் உள்ள சாஹிபாபாத் காவல் சரகத்துக்கு உட்பட்ட மோகன் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது.

டெல்லி முதல்வரான அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 2015 சட்டப்பேரவை தேர்தல் வரை, நீல நிற வேகன் ஆர் கார் ஒன்றை பயன்படுத்தி வந்தார்.kejriwalcar_jakkamma1

இரு தினங்களுக்கு முன் இந்த கார் திருடுபோனது. இந்நிலையில், அக்.14 காலை காஸியாபாத்தில் உள்ள சாஹிபாபாத் காவல் சரகத்துக்கு உட்பட்ட மோகன் நகரில் இந்த கார் கண்டுபிடிக்கப்பட்டது.

இத்தகவலை உறுதிப்படுத்திய காஸியாபாத் காவல் கண்காணிப்பாளர் ஆகாஷ் தோமர், டெல்லி பதிவெண் கொண்ட கேஜ்ரிவாலின் கார் காஸியாபாத்தின் மோகன் நகரில் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். மேலும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்த விசாரணை நடந்துவருவதாகவும் தெரிவித்தார்.

அர்விந்த் கேஜ்ரிவால் 2015 தேர்தல் வரை பயன்படுத்தி வந்த நீல நிற வேகன் ஆர் காரை வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் அவருக்கு கடந்த 2013 ஜனவரியில் பரிசாக அளித்திருந்தார்.

கேஜ்ரிவால் முதல்வர் ஆன பிறகு இந்த காரை ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் மாற்றி மாற்றி பயன்படுத்தி வந்தனர். தற்போது அந்த காரை ஆம் ஆத்மி கட்சியின் இளைஞர் அணி தலைவர் வந்தனா சிங் பயன்படுத்தி வந்தார். இவர் வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் டெல்லி தலைமைச் செயலகத்துக்கு வெளியில் காரை நிறுத்தினார். இந்நிலையில் 3 மணி நேரத்துக்கு பிறகு பகல் 2 மணியளவில் கார் திருடு போனது தெரியவந்தது.

இதனால் திருடுபோன கேஜ்ரிவால் கார் பற்றிய தகவலுக்கு உரிய வெகுமதி வழங்கப்படும் என அவரது ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருந்தது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>