கூகுளில் 16 வயது சிறுவனுக்கு ரூ.1.44 கோடி சம்பளம்:மு.திலிப்

2017-02-08-02-58-24

புதுடெல்லி : உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், அரசு பள்ளியில் படிக்கும் 16 வயது மாணவனை ஆண்டுக்கு ரூ.1.44 கோடி சம்பளத்திற்கு பணியமர்த்த உள்ளது. அரியானா மாநிலம், குருஷேத்ராவில் உள்ள மதானா பகுதியைச் சேர்ந்தவர் ஹர்ஷித் சர்மா(16). சண்டிகரில் உள்ள அரசு மாடல் சீனியர் செகண்டரி பள்ளியில், 11ம் வகுப்பு தகவல் தொழில்நுட்ப பிரிவில் படித்து வருகிறார். இந்நிலையில் ஹர்ஷித்துக்கு கூகுள் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.1.44 ஊதியத்தில் பணி வழங்கியுள்ளது. அமெரிக்காவில் உள்ள கூகுள் நிறுவனத்தில் விரைவில் ஹர்ஷித் கிராபிக் டிசைனராக பணியில் சேர உள்ளார். மாணவன் ஹர்ஷித் கூகுள் நிறுவனத்தில் முதலில் பயிற்சிக்கு செல்கிறார். ஒரு ஆண்டு பயிற்சியின்போது மாதந்தோறும் அவருக்கு ரூ.4 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும். அவரது பயிற்சி நிறைவடைந்தவுடன் மாதச் சம்பளமாக ரூ.12 லட்சம் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக ஹர்ஷித் கூறுகையில், “நான் ஆன்லைனில் வேலை தேடினேன். கடந்த மே மாதம் இந்த பணிக்காக நான் விண்ணப்பித்தேன். ஆன்லைனிலேயே இன்டர்வியூ நடத்தப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக கிராபிக் டிசைனிங்கில் நான் ஆர்வமுடன் இருந்தேன். நான் செய்திருந்த கிராபிக் டிசைனிங் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டேன். பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகர்களுக்காக போஸ்டர் வடிவமைப்பேன். பள்ளிப் பருவத்திலேயே ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை சம்பாதித்துள்ளேன்” என்றார். மேலும் கூகுள் லிங் மூலமாக பணிக்கு விண்ணப்பித்ததாகவும், கடந்த ஜூன் மாதம் கூகுள் அவருக்கு பணி நியமன ஆணை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>