குழந்தைகள் சித்ரவதை, மூளைச்சலவை என கோவை ஈஷா யோகா மையம் மீது குவியும் புகார்கள்

ஈஷா சமஸ்கிருத பள்ளியில் படித்து வரும் குழந்தைகளும் சித்ரவதை செய்யப்படுவதாக புகார்கள் குவிந்து வருகின்றன. மதுரையை சேர்ந்த முன்னாள் காவலர் மகேந்திரன் என்பவர் சமஸ்கிருத பள்ளியில் பயின்ற தனது இரு மகன்களுக்கு நேர்ந்த கொடுமையை விளக்கியுள்ளார். சிறு சேட்டைகள் செய்தாலும் குழந்தைகளுக்கு கடும் தண்டனை விதிக்கப்படுவதாக அவர் கூறினார்.

ஈஷா சமஸ்கிருத பள்ளியில் படித்து வரும் குழந்தைகளும் சித்ரவதை செய்யப்படுவதாக புகார்கள் குவிந்து வருகின்றன. மதுரையை சேர்ந்த முன்னாள் காவலர் மகேந்திரன் என்பவர் சமஸ்கிருத பள்ளியில் பயின்ற தனது இரு மகன்களுக்கு நேர்ந்த கொடுமையை விளக்கியுள்ளார். சிறு சேட்டைகள் செய்தாலும் குழந்தைகளுக்கு கடும் தண்டனை விதிக்கப்படுவதாக அவர் கூறினார்.

கோவை: கோவை ஈஷா யோகா மையம் மீது பல்வேறு தரப்புகளில் இருந்தும் அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வருகின்றன. கோவை வடபள்ளியை சேர்ந்த பேராசிரியர் காமராசு தனது மகள்களை மொட்டையடித்து சன்னியாசியாக மாற்றிவிட்டதாக ஜக்கி வாசுதேவ் மீது புகார் கூறியதை தொடர்ந்து ஈஷா யோகா மையம் மீது மேலும் பல புகார்கள் குவிந்து வருகின்றன. தூத்துக்குடியை சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவர் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் ஈஷா யோகா மையத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமது மகன் அரிகரனை மீட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதே போன்று ஈஷா சமஸ்கிருத பள்ளியில் படித்து வரும் குழந்தைகளும் சித்ரவதை செய்யப்படுவதாக புகார்கள் குவிந்து வருகின்றன. மதுரையை சேர்ந்த முன்னாள் காவலர் மகேந்திரன் என்பவர் சமஸ்கிருத பள்ளியில் பயின்ற தனது இரு மகன்களுக்கு நேர்ந்த கொடுமையை விளக்கியுள்ளார். சிறு சேட்டைகள் செய்தாலும் குழந்தைகளுக்கு கடும் தண்டனை விதிக்கப்படுவதாக அவர் கூறினார்.

தனது மூத்த மகன் ஹேமந்த் ஆயிரம் தோப்பு கரணம் போட்டது, கழிவறையை சுத்தம் செய்தது, மாட்டு சானத்தை அள்ளியது போன்ற தண்டனைகளை சந்தித்ததாக மகேந்திரன் விவரித்தார். இதனிடைய ஈஷா யோகா மையத்தில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிய செந்தில் குமார் என்பவர் ஜக்கி வாசுதேவ் மீது சரமாரி புகார் தெரிவித்துள்ளார். ஈஷா யோகா மையத்தில் பயிற்சிக்கு வரும் பெண்கள் மூளைச்சலவை செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

வசதி படைத்த குடும்பத்தினரை தனியாக கவனித்து அவர்களை மையத்திலே தங்கவைத்து சொத்துக்களை அபகரிக்க சிலர் பணியாற்றி வருவதாக செந்தில் குமார் தெரிவித்துள்ளார். ஈஷா யோகா மையம் மீது பரபரப்படும் அவதூறுகளை தடுக்க வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் தன்னார்வலர்கள் மனு அளித்துள்ளனர். மனுவில் ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு செய்தி வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>