குளியல் காட்சிகளை படம்பிடித்து பணம் பறிப்பு : பெண்களை மிரட்டி உல்லாசம் அனுபவித்த போலி சிபிஐ அதிகாரி பிடிபட்டார்

2016-08-9-02-39-54

சென்னை : சென்னை பெசன்ட் நகர் டி.எம். மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் முருகன். இவர் அந்த பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் வசித்து வருகிறார். இவருக்கு தாமோதரன் (27) என்ற மகன் உள்ளார்.

இவர்கள் வசிக்கும் வீட்டின் கீழ் தளத்தில் பெண்கள் விடுதி ஒன்று உள்ளது. முதல் தளத்தில் வசித்து வரும் தாமோதரன், இரவு நேரத்தில் கீழ் தளத்தில் உள்ள பெண்கள் விடுதிக்கு அடிக்கடி செல்வாராம். அங்கு மறைந்து இருந்து பெண்கள் குளிக்கும்போது செல்போனில் படம் எடுத்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அங்கு தங்கியுள்ள இளம்பெண்கள், விடுதி ஊழியர் காவேரியிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த காவேரி சம்பவம் குறித்து தாமோதரனிடம் கேட்டுள்ளார்.

அதற்கு தாமோதரன் நான் சிபிஐ அதிகாரி என்று தெரிந்தும் என்னிடமே கேள்வி கேட்கிறாயா என்று மிரட்டினார்.

பின்னர், இதுபோன்ற கேள்விகளை கேட்டால், நான் உங்களை எல்லாம் சிறையில் தள்ளிவிடுவேன் என்று மிரட்டி உள்ளார். இதனால் அச்சமடைந்த காவேரி திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் தாமோதரன் வீட்டிற்கு போலீசார் நேற்று முன்தினம் இரவு சென்றுள்ளனர். அப்போது வீட்டில் தாமோதரன் இல்லாததால் அவரது தாய் மீனாவிடம் உங்கள் மகன் வந்த உடன் காவல் நிலையத்துக்கு வரும் படி கூறிவிட்டு போலீசார் வந்து விட்டனர்.

பின்னர் வீட்டுக்கு வந்த தாமோதரனிடம் போலீஸ் உன்னை விசாரணைக்காக வரும் படி கூறியதாக தாய் மீனா தெரிவித்தார். அதன்படி திருவான்மியூர் காவல்நிலையத்துக்கு சைரன் பொருத்திய காருடன் தாமோதரன் சென்றார்.

பின்னர், காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் அறைக்கு சென்று அங்குள்ள சேரில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்துள்ளார்.

உடனே இன்ஸ்பெக்டர் நீங்கள் யார் என்று கேட்டார். அப்போது நீங்கள் விசாரணைக்காக அழைத்த தாமோதரன் நான்தான். நான் சிபிஐயில் சப்- இன்ஸ்பெக்டராக இருக்கிறேன்.

என்னை ஏன் அழைத்தீர்கள் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு அடையாள அட்டையை காண்பித்தார்.

இதனால் சற்று தயக்கமடைந்த போலீசார் தாமோதரனிடம் சிபிஐயில் எந்த பிரிவில் நீங்கள் வேலை செய்கிறீர்கள் என்று கேட்டபோது, அவர் பதில் சொல்ல முடியாமல் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த இன்ஸ்பெக்டர் செல்லப்பா போலீசுக்கே உரிய பாணியில் தாமோதரனிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவரிடம் சிபிஐயில் சப்- இன்ஸ்பெக்டராக பணி செய்யும் ஐடி கார்டு, வக்கீல் ஐடி கார்டு, ஐடி நிறுவனத்தில் வேலை செய்வது போல் ஐடி கார்டு என மூன்று போலி ஐடி கார்டுகள் இருப்பது தெரியவந்தது.

மேலும், அவரிடம் தீவிரமாக போலீசார் விசாரணை நடத்திய போது தாமோதரன் பல பெண்களை ஆபாசமாக படம் எடுத்து அவர்களை மிரட்டி உல்லாசமாகவும் இருந்துள்ளார்.

மேலும் அவர்களிடம் பணம் பறித்தும், பல நிறுவனங்களில் சிபிஐ அதிகாரி என கூறி பணம் பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து சைரன் பொருத்தப்பட்ட கார், காவலர் சீருடை இரண்டு, போலி அடையாள அட்டைகள் மூன்று, செல்போன், ஆபாச புகைப்படங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது:

தாமோதரன் தான் சிபிஐயில் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பதாக போலியாக அடையாள அட்டையை தயார் செய்து சுற்றி வந்துள்ளார்.
மேலும், அவர் வைத்துள்ள காரில் சைரன் பொருத்தப்பட்டு அதிகாரி போல் வலம் வந்துள்ளார். குறிப்பாக இரவு நேரத்தில் அவர் காரில் செல்லும் போது தனியாக நடந்து செல்லும் இளம் பெண்ணை பார்த்தால் காரை நிறுத்தி நீ எங்கே செல்லவேண்டும்.

நான் சிபிஐ அதிகாரி உன்னை உங்கள் வீட்டில் விட்டு விடுகிறேன் என்று கூறி பல பெண்களை மிரட்டி உல்லாசமாக இருந்துள்ளார்.

பின்னர், அவர்களை நிர்வாணமாக படம் எடுத்து வைத்து கொண்டு அவர்களின் செல்போன் எண்ணை வாங்கி ைவத்து கொண்டு பெண்ணை வீட்டிற்கு அனுப்பி வைத்து விடுவார்.

இரண்டு நாள் கழித்து அந்த பெண்ணை தொடர்பு கொண்டு வசதிக்கு ஏற்ப பணத்தை கேட்டு மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். இதுதவிர பல நிறுவனங்களில் நண்பர்களுடன் சேர்ந்து சிபிஐ அதிகாரி போல் நடித்து சோதனை செய்வதாக பல லட்சம் பறித்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதுபோல் மோசடியாக சம்பாதித்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

வீட்டில் பெற்றோரிடம் எனக்கு அரசு வேலை கிடைத்துள்ளது என்று கூறி பெற்றோரை ஏமாற்றி வந்துள்ளார்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்புதான் பெசன்ட் நகரில் வாடகைக்கு குடியேறி உள்ளனர். முன்பு பெருங்குடி அருகே உள்ள கல்லுக்குட்டை அருகே வசித்து வந்துள்ளார். தாமோதரன் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாததால் பல மோசடி செயல்களில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதேபோல், விடுதியில் தங்கி உள்ள பெண்களை தன் வலையில் சிக்க வைக்க ரகசியமாக தனது செல்போன் மூலம் ஆபாசமாக படம் பிடித்துள்ளார். அதை வைத்து அந்த பெண்களிடம் பணம் பறித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. பணம் தர மறுக்கும் பெண்களை உன் புகைப்படத்தை இணைய தளத்தில் வெளியிடுவேன் என கூறி மிரட்டி உல்லாசமாக இருந்ததும் தெரியவந்தது.

இவர் இதுபோல் எத்தனை இளம் பெண்களை ஏமாற்றி உள்ளார். சோதனை என்ற பெயரில் எந்தெந்த நிறுவனங்களில் பணம் பறித்தார் என்ற பட்டியலை தாமோதரனிடம் போலீசார் பெற்றுள்ளனர். பல இடங்களில் பெரிய அளவில் மோசடி செய்துள்ளதால் இவருடன் மோசடியில் ஈடுபட்ட நண்பர்கள் யார் யார்? போலியாக அடையாள அட்டையை எப்படி தயாரித்தார் என்ற தகவலை பெறப்பட்டுள்ளது. தாமோதரனுக்கு உடந்தையாக இருந்த நபர்களை நாங்கள் விரைவில் கைது செய்வோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>