குளச்சல் துறைமுக திட்டத்துக்கு கேரளா எதிர்ப்பு

குளச்சல் துறைமுக திட்டத்துக்கு கேரளா எதிர்ப்பு

குளச்சல் துறைமுகத்தால், விழிஞ்ஞத்தில் தாங்கள் அமைத்து வரும் துறைமுகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என கருதும் கேரள அரசு, இது தொடர்பாக பிரதமருக்கு கடிதமும் எழுதியுள்ளது. இனயத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள விழிஞ்ஞத்தில் ரூ.7 ஆயிரத்து 525 கோடியில் அதானி குழுமம் துறைமுகம் அமைத்து வருகிறது.

 

நாட்டின் கடைக்கோடியில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் பகுதியில் பண்டைய காலத்தில் சிறிய அளவில் மீன் பிடித் துறைமுகம் இயங்கி வந்தது. புராதான துறைமுகமான இதனை, கப்பலில் உலகை சுற்றி வந்த வாஸ்கோடகாமா கொளச்சி என அழைத்தார்.

 

திருவாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த, குமரி மாவட்டம், தமிழகத்துடன் இணைக்கப்பட்ட நிலையில், இதனை விரிவுப்படுத்தி, சர்வதேச துறைமுகமாக கட்டமைக்க வேண்டும் என்பது, தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.

 

இதற்கு மத்திய அரசு சம்மதம் தெரிவிக்க, ஸ்பெயின் நாட்டை சேர்ந்த நிறுவனம் ஒன்று குளச்சலில் ஆய்வு மேற்கொண்டது. ஆனால், குளச்சலில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இனயம் கிராமத்தில் துறைமுகத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என, ஸ்பெயின் நிறுவனம் ஆலோசனை வழங்கியது.

 

இதனை அடுத்து, இனயத்தில் 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் துறைமுகம் அமைக்க மத்திய அரசு இசைவு தெரிவித்துள்ளது. மூன்று கட்டங்களாக துறைமுக கட்டுமான பணிகள் நடைபெறவுள்ளது.
திருவனந்தபுரம்

 

குளச்சல் துறைமுக திட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வரும் கேரள அரசு, இது தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேச முடிவு செய்துள்ளது.

 

குளச்சல் துறைமுகம்
குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள இனயத்தில் வர்த்தக துறைமுகம் அமைக்க ஒப்புதல் அளித்துள்ள மத்திய அரசு, இதற்காக ரூ.25 ஆயிரம் கோடி நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது. இது தமிழக மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை தமிழக அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன.

 

ஆனால் இந்த திட்டத்துக்கு கேரள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குளச்சல் துறைமுகத்தால், விழிஞ்ஞத்தில் தாங்கள் அமைத்து வரும் துறைமுகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என கருதும் கேரள அரசு, இது தொடர்பாக பிரதமருக்கு கடிதமும் எழுதியுள்ளது. இனயத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள விழிஞ்ஞத்தில் ரூ.7 ஆயிரத்து 525 கோடியில் அதானி குழுமம் துறைமுகம் அமைத்து வருகிறது.

 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.
இந்த நிலையில் கேரள சட்டசபையில் குளச்சல் துறைமுக பிரச்சினையை காங்கிரஸ் உறுப்பினர் எம்.வின்சென்ட் நேற்று எழுப்பினார். அப்போது அவர் கூறுகையில், ‘விழிஞ்ஞம் துறைமுக திட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில், குளச்சல் துறைமுகத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. இது பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் திட்டமிட்ட செயல் ஆகும்’ என்றார்.

 

மத்திய அரசின் சகர்மலா திட்டத்தின் கீழ் குளச்சல் துறைமுகம் வருவதாக கூறிய வின்சென்ட், விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு அடிக்கப்போகும் சாவு மணியே குளச்சல் துறைமுகம் என்று குற்றம் சாட்டியதுடன், இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுமாறு முதல்–மந்திரியை கேட்டுக் கொண்டார்.

 

இதற்கு முதல்–மந்திரி பினராயி விஜயன் பதிலளிக்கும் போது கூறியதாவது:–

 

குளச்சல் துறைமுகத்துக்கு மத்திய அரசு நெறியற்ற முறையில் ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த திட்டத்துக்கு விழிஞ்ஞம் துறைமுகத்தை விட அதிக அளவு நிதியும் தேவைப்படுகிறது. விழிஞ்ஞத்தில் இருந்து வெறும் 30 கி.மீ. தொலைவில் சாத்தியப்படுத்த முடியாத மற்றொரு துறைமுகம் அமைப்பது விஞ்ஞானப்பூர்வமற்றது. பொதுமக்களின் வரிப்பணத்தை இது போன்ற முரண்பாடற்ற வழிகளில் செலவழிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது.

 

குளச்சல் துறைமுக திட்டம் தொடர்பான கேரள அரசின் கவலைகளை ஏற்கனவே பிரதமருக்கு கடிதம் மூலம் தெரிவித்து உள்ளோம். அத்துடன் இது தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்து முறையிடுவதற்கு நேரம் ஒதுக்குமாறு நான் கேட்டிருக்கிறேன். இந்த மாதத்துக்குள் பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கப்படும் என நம்புகிறேன். அப்போது அவரிடம் இது தொடர்பாக நான் நேரில் எடுத்துரைப்பேன்.

மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக கேரள எம்.பி.க்கள் 17–ந்தேதி (நாளை) சந்தித்து ஆலோசனை நடத்துவர். அதில் எடுக்கப்படும் முடிவுகளின்படி அவர்கள் பாராளுமன்றத்திலும் இந்த பிரச்சினையை எழுப்புவார்கள்.

முன்னதாக 2000 கி.மீ. தூரத்துக்குள் வல்லார்பாடம் துறைமுக திட்டம் செயல்படுத்தப்படுவதாக கூறி விழிஞ்ஞம் துறைமுகத்தை எதிர்த்த மத்திய அரசு, தற்போது 30 கி.மீ. தூரத்துக்குள் குளச்சல் துறைமுகத்துக்கு ஒப்புதல் அளித்து உள்ளது.

விழிஞ்ஞம் துறைமுக திட்டத்தை குறிப்பிட்ட கால வரையறைக்குள் முடிக்க மாநில அரசு உறுதிபூண்டுள்ளது. ஆனால் இந்த திட்டத்தை அதானி குழுமம் செயல்படுத்தி வருவதால், மாநில அரசால் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தலையிடவும் முடியாது.

இவ்வாறு முதல்–மந்திரி பினராயி விஜயன் கூறினார்.

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>