குல்பூஷன் யாதவிற்கு மரண தண்டனை: பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை

PicsArt_04-11-01.55.12

புதுடெல்லி,

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உளவு பார்த்து வந்ததாக குல்பு‌ஷன் ஜாதவ் (வயது 46) என்ற இந்தியரை கடந்த ஆண்டு மார்ச் 3–ந்தேதி பாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்தனர். இந்திய கடற்படை அதிகாரியான ஜாதவ், இந்திய உளவு அமைப்பான ‘ரா’–வுக்காக பணியாற்றியதாக அவர் மீது பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.

ஆனால் குல்பு‌ஷன் ஜாதவ் இந்திய கடற்படையில் பணியாற்றியதை ஒப்புக்கொண்ட இந்தியா, அவர் இந்தியாவுக்காக உளவு பார்த்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுத்தது. கடற்படையில் இருந்து முன்கூட்டியே ஓய்வு பெற்ற ஜாதவ், அதன்பிறகு இந்திய அரசுடன் எந்தவித தொடர்பிலும் இல்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்தது.

கைது செய்யப்பட்ட குல்பு‌ஷன் ஜாதவ் மீதான வழக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் அவருக்கு மரண தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இது இந்தியவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்த விவகாரத்தில் குல்பூஷன் யாதவிற்கு ஆதரவாக ஒரே குரலில் கோரிக்கை விடுத்தன.

மாநிலங்களவையில் குல்பூஷன் யாதவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறித்து பேசிய சுஷ்மா சுவராஜ்,” ஜாதவிற்கு நீதி கிடைக்க இந்தியா அனைத்து வகையிலான நடவடிக்கையையும் எடுக்கும். குல்பூஷன் யாதவிற்கு மரண தண்டனை நிறைவேற்றினால் இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜ்ய ரீதியிலான உறவில் கடும் விளைவுகள் ஏற்படும். ஜாதவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் இட்டுக்கட்டப்பட்டவை. ஜாதவ் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை” என்றார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>