குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தப்படியாக குலசேகரன்பட்டினத்தில்தான் தசரா விழா கோலாகலமாக நடைபெறுகிறது.

விழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுகின்றனர்.
நவராத்திரி விழாவே அங்கு தசரா திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த 1-ந்தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டிக்கொண்டனர்.

சூரசம்ஹாரம்

காப்பு கட்டிய பக்தர்கள் நேர்த்திக்கடனாக காளி, அனுமன், ராமர், கிருஷ்ணர், பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான், அரக்கன், கரடி போன்ற பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்தனர்.
அந்த காணிக்கையை 10-ம் திருநாளான இன்று (திங்கட்கிழமை) கோவிலில் செலுத்துகிறார்கள். இன்று காலை 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடக்கிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக அரக்கனை முத்தாரம்மன் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று நள்ளிரவில் நடைபெறுகிறது.
இதையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவில் முன்பாக எழுந்தருள்கிறார்.
அப்போது காளி வேடம் அணிந்த பக்தர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் அம்மனை பின்தொடர்ந்து கடற்கரைக்கு செல்கிறார்கள்.
மகிஷாசூரமர்த்தினி திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்கிறார்.

லட்சக்கணக்கான பக்தர்கள்

இதைக்காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் குலசேகரன்பட்டினத்தில் குவிந்துள்ளனர்.

அதை தொடர்ந்து இரவு 1 மணி அளவில் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளி, அபிஷேக தீபாராதனைகள் நடக்கிறது. 2 மணிக்கு அம்மன் சிதம்பரேசுவரர் கோவிலில் எழுந்தருள்கிறார். அங்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
அதிகாலை 3 மணிக்கு அம்மன் திருத்தேரில் பவனி வருகிறார்.

விழாக்கோலம்

தசரா விழாவையொட்டி குலசேகரன்பட்டினம் நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டு உள்ளது.
தசரா குழுவினர் குதூகலத்துடன் பல்வேறு வேடங்களை அணிந்து கலைநிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இன்று இரவு விடிய, விடிய கலைநிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>