குமரி மீனவர்களை ஆதரித்து போஸ்டர் ஒட்டிய 2 பேர் சென்னையில் கைது

2017-09-12-21-23-51

புயலில் சிக்கி இன்னும் கரை திரும்பாத குமரி மாவட்ட மீனவர்களை மீட்டுத்தரவும், அவர்களின் நிலைமையை அறிந்து கூறவும் வலியுறுத்தி, மூன்று நாள்களாக அங்கு மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். குழித்துறையில் ரயில்நிலையம் முற்றுகை, குளச்சலில் சாலைமறியல் என அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக, மற்ற மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடந்துவருகின்றன. சென்னையில் நேற்று, 25 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், தலைமைச்செயலக முற்றுகைப் போராட்டம் நடத்த முற்பட்டனர். போலீஸாரின் தடுப்பால் சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், சென்னையில் பரவலாக மீனவர்களை மீட்கக் கோரியும், மீட்பு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. வெள்ளிக்கிழமை அதிகாலை, புரட்சிகர மாணவர் முன்னணி அமைப்பினர், அகில இந்திய வானொலி அருகிலிருந்து கடற்கரைச் சாலை வழியாக சுவரொட்டி ஒட்டிக்கொண்டிருந்தனர். அப்போது, சென்ற வருடம் தை மாதம் தாக்குதலுக்கு உள்ளான திருவல்லிக்கேணி நடுக்குப்பம் பகுதியில், புரட்சிகர மாணவர் முன்னணி அமைப்பைச் சேர்ந்த திலீபன், தமிழ் ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>