குமரி மீனவர்களுக்கு ஆதரவாக பேரணி செல்ல முயன்ற சென்னை மீனவர்கள் கைது

ch-300x160

சென்னை: ஓகி புயலில் சிக்கி நடுக்கடலில் மாயமான சுமார் 1013 மீனவர்களை கண்டுபிடித்து தரக்கோரி கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் மக்கள் நடத்தி வந்த 14 மணி நேர ரயில் மறியல் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. இருப்பினும் அவர்களுக்கு ஆதரவாக தலைநகர் சென்னையில் உள்ள மீனவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். சென்னை நொச்சிக்குப்பத்தை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் தலைமைசெயலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பேரணியாக செல்லும் மீனவர்கள் தலைமை செயலகத்தை முற்றுகையிட திட்டமிட்டனர். ஆனால் இவர்களை தலைமைசெயலகம் நோக்கி செல்லவிடாமல் போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.

போராட்டம் குறித்து மீனவர்கள் பேசுகையில், 25-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 2,000 மீனவர்கள் இந்த போராட்டத்தில் பங்கெடுத்துள்ளதாக குறிப்பிட்டனர். ஓகி புயலில் சிக்கி மாயமாகியுள்ள மற்றும் இறந்துள்ளவர்களை அவர்களின் உறவினர்களிடம் உடனே ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மராட்டியம் உள்ளிட்ட பகுதிகளில் கரை ஒதுங்கியுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக மீட்டு தமிழகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கவும் கோரியுள்ளனர். தமிழக முதல்வர் குமரிக்கு நேரடியாக சென்று மீனவர்களின் குறைகளை கேட்டு அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்கவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மெரினாவில் கட்டுப்பாடு:

சென்னை மெரினா கடற்கரையில் நுழைய போலீஸ் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. கன்னியாகுமரி மீனவர்களுக்கு ஆதரவாக சென்னை மீனவர்கள் போராட்டம் நடத்துவதாக செய்திகள் வெளியானதை அடுத்து கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். போராட்டத்தை தடுக்க மெரினாவில் தடுப்புகளை வைத்து போலீஸ் கட்டுபாடு விதித்துள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>