குத்தகைக்கு எடுத்த குளத்தை காணோம்: மாற்றுதிறனாளி புகார்

பெத்தனங்குட்டை மற்றும் தெற்குக்குட்டை எனஇருகுளங்களைஅவர்குத்தகைக்குஎடுத்தார்.பின்னர்குளங்களைதேடிசென்றபோதுதெற்குக்குட்டை மட்டும் இருந்தது.பெத்தனங்குட்டையைகாணவில்லை

பெத்தனங்குட்டைமற்றும்தெற்குக்குட்டைஎனஇருகுளங்களைஅவர்குத்தகைக்குஎடுத்தார்.பின்னர்குளங்களைதேடி சென்றபோதுதெற்குக்குட்டைமட்டும்இருந்தது. பெத்தனங்குட்டையைகாணவில்லை

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே காளஹஸ்தினாபுரத்தை அடுத்த முக்குரும்பூரை சேர்ந்தவர் வெங்கட்ராமன்(30). மாற்று திறனாளி. பிப்ரவரி மாதம் முக்குரும்பூர் ஊராட்சியில் நடைபெற்ற மீன் வளர்ப்பு குளத்தை குத்தகை எடுக்கும் ஏலத்தில் கலந்து கொண்டார்.பெத்தனங்குட்டை மற்றும் தெற்குக்குட்டை என இரு குளங்களை அவர் குத்தகைக்கு எடுத்தார். பின்னர் குளங்களை தேடி சென்றபோது தெற்குக்குட்டை மட்டும் இருந்தது. பெத்தனங்குட்டையை காணவில்லை.

ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் குளத்தை தூர்த்து அந்த இடத்தில் விவசாயம் செய்து வருவது தெரியவந்தது.
நான் குத்தகைக்கு எடுத்த குளத்தை எனக்கு காட்ட வேண்டும். குளத்தை மீட்க வேண்டும் என தமிழக முதல்வர், நாகை மாவட்ட கலெக்டர், சட்டப்பணிகள் குழுவுக்கு வெங்கட்ராமன் மனு அனுப்பினார். உடனடியாக அரசுக்கு சொந்தமான குளத்தை மீட்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு சட்ட பணிகள் குழுவினர் அறிவுரை வழங்கினர்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய தரங்கம்பாடி தாசில்தார், பெத்தனங்குட்டை ஆக்கிரமிக்கப்பட்டு அந்த இடத்தில் விவசாயம் செய்யப்பட்டு வருவதாகவும், அறுவடை முடிந்ததும் குளம் மீட்கப்படும் என்றும் தெரிவித்தார்.

வெங்கட்ராமன் மீண்டும் தமிழக முதல்வர், நாகை மாவட்ட கலெக்டர் என மனுக்களை அனுப்பியுள்ளார். திரைப்படம் ஒன்றில், கிணத்தை காணவில்லை என வடிவேலு போலீசில் புகார் கொடுப்பார். அதேபாணியில் குத்தகைக்கு எடுத்த குளத்தைக் காணவில்லை என வெங்கட்ராமன் புகார் செய்து இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>