குட்கா’ விவகாரத்தில் மந்திரிகளுக்கு லஞ்சம் ராஜ்யசபாவில் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளார். கனிமொழி

kanimozhi_20110307

பழனிசாமி அரசை காப்பாற்ற, அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.க்களிடம் நடந்த பேரம்; குட்கா விற்பனையை அனுமதிக்க அமைச்சர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரங்கள் தொடர்பாக பார்லி மென்டில் பிரச்னையை கிளப்ப தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.கனிமொழி திட்டமிட்டுள்ளார்.

ஜூலை, 17ல் பார்லி மென்ட் மழைக்கால கூட்டத் தொடர் துவங்குகிறது; ஆக. 11ல் முடிகிறது. ஆதாரங்கள்இந்த கூட்டத்தொடரில், ஆளும் கட்சிக்கு எதிராக புயலை கிளப்பும் விவகாரங்களை, ராஜ்யசபாவில் எழுப்ப கனிமொழி தயாராகி வருகிறார். அதற்கான ஆதாரங்களை, அவர் திரட்ட துவங்கி உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறினர்.

அவர்கள் மேலும் கூறியதாவது:பார்லிமென்ட் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் சமீபத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், டில்லியில் நடந்தது. அதில், ஜூலை, 17ல் மழைக்காலக் கூட்டத் தொடரை துவக்கி, ஆகஸ்ட், 11ல் முடிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அக்கூட்டத் தொடரில், தமிழகம் சம்பந்தப்பட்ட முக்கிய பிரச்னைகளை கிளப்ப, கனிமொழி முடிவு செய்துள்ளார்.

தடை செய்யப்பட்ட ‘பான் குட்கா’ போன்ற போதைப் பொருட்களை, சென்னையில் பதுக்கி வைத்து, விற்பனை செய்ய இரண்டு போலீஸ் டி.ஜி.பி.க்கள், மாநகராட்சி, உணவுத்துறை, மத்திய கலால் துறை அதிகாரிகளுக்கு 40 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் வருமான வரித்துறையிடம் சிக்கி உள்ளன.நடவடிக்கைஇந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தமிழக அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளதா?மத்திய உள்துறை என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பது குறித்தும் கனிமொழி கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளார்.

மேலும் சசிகலா அணியின் சார்பில் கூவத்துாரில் தங்க வைக்கப்பட்ட, எம்.எல்.ஏ.க்களுக்கு கோடிக்கணக்கில் பணம் தருவதாக பேரம் பேசியதாக ‘வீடியோ’ வெளியானது. அது தொடர்பாக வருமான வரித்துறை எடுத்த நடவடிக்கை குறித்தும் அவர் கேட்க உள்ளார்.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு நடந்த பட்டுவாடா பட்டியலில் முதல்வர் உள்ளிட்ட சில அமைச்சர்களின் பெயர்கள் இருந்தன. அவர்களின் பெயர்களை வழக்கில் சேர்க்க தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து பேச கனிமொழி முடிவு செய்துள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>