குடையை வாடகைக்கு மொபைல் ஆப் மூலமாக 180 டெபாசிட் தொகை கட்ட வேண்டும். அரை மணி நேரத்திற்கு 5 கட்டணம்.செபஸ்டின்

masala_3185931f

சீனாவில் அன்றாட உபயோகப் பொருட்களை வாடகைக்கு விடுவது புதிய பிசினசாகி வருகிறது. கடந்த 2 ஆண்டுக்கு முன், சைக்கிள் வாடகை பிசினஸ் தொடங்கி நல்ல லாபத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, குடையை வாடகைக்கு விடும் பிசினசை ஒரு நிறுவனம் தொடங்கியது. மொபைல் ஆப் மூலமாக 180 டெபாசிட் தொகை கட்ட வேண்டும். அரை மணி நேரத்திற்கு 5 கட்டணம். இதனை செலுத்திவிட்டால், மொபைலுக்கு, குடையின் பூட்டு எண் வந்து விடும். ரயில் நிலையம், பஸ் நிலையம் என பொது இடங்களில் வாடகைக் குடைகள் தொங்க விடப்பட்டிருக்கும். அவற்றில், மொபைலில் வந்த எண்ணை பயன்படுத்தி, குடையை பயன்படுத்திக் கொள்ளலாம். வாடகைக்காக நேரம் முடிந்ததும், பொது இடத்தில் உள்ள குடை வைக்கும் இடத்தில் வைத்து விட்டு சென்று விடலாம். இந்த குடையை வாடகைக்கு வாங்குவதில் காட்டிய ஆர்வத்தை, திருப்பி கொடுப்பதில் யாருமே காட்டவில்லை.

பிசினஸ் தொடங்கிய 3 மாதத்தில், 3 லட்சம் குடைகள் அம்பேல். வாடகைக்கு கொண்டு போனவர்கள், ஒரேடியாக கொண்டு போய் விட்டார்கள். மிஞ்சியிருப்பது சொற்ப அளவு தான். ஆனாலும் மனம்தளராத அந்த நிறுவனம் இந்தாண்டு இறுதிக்கும் புதிதாக 3 லட்சம் குடைகளை வாங்கி வாடகைக்கு வைக்கப்படும் என கூறி உள்ளது. ஒரு குடையின் விலை 550 என அந்நிறுவனம் கூறி உள்ளது.இதேபோல வாடகை சைக்கிள் பிசினஸ் செய்த ஒரு நிறுவனம் சமீபத்தில் தொழிலை நிறுத்திவிட்டது. காரணம், 90% சைக்கிள்கள் திருடுபோய்விட்டதாம். வாடகை நேரம் முடிந்ததும் சைக்கிளையும் எங்கு வேண்டுமானாலும் விடலாம். அதை பயன்படுத்தி சிலர் கால்வாயில் தள்ளிவிடுதல், ரோட்டின் நடுவில் நிறுத்துதல், சைக்கிளை சேதப்படுத்தி செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்களாம். இவ்வளவு பிரச்னையும் தாண்டி பல நிறுவனங்கள் வாடகை சைக்கிள் தொழிலில் முதலீடு செய்து களமிறங்குகின்றன.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>