குடிசை மாற்று வாரியம் மூலம் 23,476 வீடுகள் கட்ட தமிழகஅரசு அனுமதி

குடிசை மாற்று வாரியம் மூலம் 23,476 வீடுகள் கட்டஜெயலலிதா அனுமதி.

குடிசை மாற்று வாரியம் மூலம் 23,476 வீடுகள் கட்டஜெயலலிதா அனுமதி.

தமிழக அரசு வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை மற்றும் பிற நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகள் ஆகியவற்றை தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் கட்டி வருகிறது. கடந்த ஐந்தாண்டு களில், பல்வேறு திட்டங் களின் கீழ் 59,023 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகள் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் கட்டியுள்ளது.

மேலும், 3,024 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 7,513 தனி வீடுகள் என 10,537 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு, குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மூலம் 23,476 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகள் கட்டுவதற்கு முதல்&அமைச்சர் ஜெய லலிதா அனுமதி வழங்கியுள்ளார்.

இதில் 7,204 அடுக்குமாடி குடியிருப்புகள் சென்னை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, ஈரோடு, கோயம்புத்துலீர், புதுக்கோட்டை, நாமக்கல் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய நகரங்களிலும்,
பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு, அவர்களது சொந்த வீட்டுமனைகளில் சென்னை, வேலுலீர், ஓசூர், ராணிப்பேட்டை, விருதுநகர், மதுரை மற்றும் 157 பேரூராட்சிகளில் 16,272 தனி வீடுகளும் கட்டப்படும். அடுக்குமாடி குடியிருப்பு கள் ஒவ்வொன்றும் 400 சதுர அடி கட்டடப் பரப்பில் ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையலறை, பால் கனி, குளியலறை மற்றும் கழிவறை ஆகியவற்றை கொண்டதாக அமையும்.

தனி வீடுகள் ஒவ்வொன்றும் 300 சதுர அடி தரைப் பரப்பள வில் பயனாளிகள் தாங்களா கவே கட்டிக் கொள்ள வழிவகை செய்யப்படும்.

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம், தேவை யான தொழில்நுட்ப வழி காட்டுதல்களை வழங்கும். தனி வீடுகள் கட்டிக் கொள் பவர்களுக்கு அரசு மானிய மாக 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>