குஜராத்; தாக்கப்பட்ட தலித்துகளையும் அவர்களது குடும்பத்தினரையும் நேரில் சந்தித்தார் கேஜ்ரிவால்

குஜராத் மாநிலம், உனாவில், இறந்த பசுவின் தோலை உரித்ததாக தாக்கப்பட்ட தலித்துகளையும் அவர்களது குடும்பத்தினரையும் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் சந்தித்துப் பேசினார்.

குஜராத்தில் கடந்த 11ஆம் தேதி 5 தலித்துகள் “பசுக் காவலர்கள்’ என்ற அமைப்பினரால் தாக்கப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இந்நிலையில், தாக்கப்பட்ட தலித்துகளை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து, அவர்களை அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உனாவில் நிகழ்ந்த சம்பவம், தனித்த சம்பவம் அல்ல. குஜராத் முழுவதும் தலித்துகள் மீதான வன்முறைகள் நிகழ்ந்து வருகின்றன. இத்தகைய அடக்குமுறைகளை நிறுத்தவில்லை என்றால் அனைத்து சமுதாயங்களைச் சேர்ந்த மக்களும் பாஜகவுக்கு பாடம் கற்பிப்பார்கள்.

குஜராத்; தாக்கப்பட்ட தலித்துகளையும் அவர்களது குடும்பத்தினரையும் நேரில் சந்தித்தார் கேஜ்ரிவால்

குஜராத்தில் உள்ள பாஜக அரசு தலித்துகள் மீது வன்முறையை ஏவி வருகிறது. அது தலித் விரோத அரசாகும். கடந்த 11ஆம் தேதி நிகழ்ந்த தாக்குதலில் 40-50 பேருக்குத் தொடர்புள்ளது. ஆனால், இதுவரை 17 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள தாங்காத் பகுதியில் கடந்த 2012-ஆம் ஆண்டு போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

குஜராத்தில் உள்ள பாஜக அரசு தலித்துகள் மீது வன்முறையை ஏவி வருகிறது. அது தலித் விரோத அரசாகும். கடந்த 11ஆம் தேதி நிகழ்ந்த தாக்குதலில் 40-50 பேருக்குத் தொடர்புள்ளது. ஆனால், இதுவரை 17 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள தாங்காத் பகுதியில் கடந்த 2012-ஆம் ஆண்டு போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை

தாக்கப்பட்ட தலித்துகளுக்கும், தற்கொலைக்கு முயன்ற தலித் இளைஞர்களுக்கும் மாநில அரசு உரிய இழப்பீட்டையும் அரசு வேலையையும் வழங்க வேண்டும் என்றார். இதனிடையே, பங்கஜ் அம்ரேலியா என்ற தலைமைக் காவலரின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கந்தி முல்ஜி வாலா என்பவரை, ராஜ்கோட் மருத்துவமனையில் அரவிந்த் கேஜரிவால் சந்தித்தது சர்ச்சையை எழுப்பியுள்ளது. கொலைக் குற்றம்சாட்டப்பட்டவருடனான கேஜரிவாலின் சந்திப்பை பாஜக கண்டித்துள்ளது.

“அரசியல் ஆதாயத்துக்காக அரவிந்த் கேஜரிவால் எதை வேண்டுமானாலும் செய்வார்’ என்று அக்கட்சி விமர்சித்துள்ளது. இதுகுறித்து கேஜரிவாலிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, உயிரிழந்த காவலர் அம்ரேலியாவின் குடும்பத்தினரையும் தாம் சந்தித்ததாகத் தெரிவித்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>