குஜராத் சட்டப்பேரவை தேர்தல்: – முதல்கட்ட பிரச்சாரம் இன்று ஓய்வு

2017-07-12-04-27-04

குஜராத்தின் 89 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு 9-ம் தேதி நடைபெற உள்ள தேர்தல் நடைபெரும் இடங்களில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது.

குஜராத் சட்டப்பேரவை தேர்தல்: 89 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு – முதல்கட்ட பிரச்சாரம் இன்று ஓய்வு
காந்திநகர்:

குஜராத்தில் 9-ம் தேதி நடைபெற உள்ள முதல்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. தேர்தல் சூடு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால் பிரதமர் மோடியின் பிரசாரத்தில் அனல் பறக்கிறது. இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

குஜராத்தில் வரும் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. 22 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி நடத்தி வரும் பா.ஜ.க.விடம் இருந்து இம்முறை ஆட்சியை கைப்பற்றி விடும் வேகத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் குஜராத்தில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரசுக்கு ஆதரவாக அக்கட்சி தலைவர் ராகுல்காந்தியும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ராகுல் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.

இந்நிலையில், குஜராத்தில் மொத்தமுள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளில், ராஜ்காட், போர்பந்தர், நர்மதா, சூரத், ஜாம்நகர், கட்ச் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடக்கிறது. இதனால், இந்த மாவட்டங்களில் பாஜ, காங்கிரஸ் தலைவர்கள் முகாமிட்டு அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 9-ம் தேதி நடக்கும் முதல் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்து வருகிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>