குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 44 பேர் கர்நாடகத்தில் சிறைவைப்பு:

2017-29-07-09-45-31

கர்நாடகா: குஜராத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்காக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சொந்த எம்.எல்.ஏக்கள் 44 பேரை இரவோடு இரவாக மாநிலத்தைவிட்டே வெளியேற்றி பெங்களூரில் தங்க வைத்துள்ளது காங்கிரஸ் கட்சி. நேற்று ஒரே நாளில் அந்தக் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு மாறியுள்ளதால் காங்கிரசின் பலம் சற்று குறைந்துள்ளது. இந்த நிலை மேலும் தொடராமல் தடுக்க எஞ்சிய எம்.எல்.ஏ.க்கள் 44 பேரும் இரவோடு இரவாக பெங்களூருவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் சொந்த ஊரில் இருக்கும் பட்சத்தில் பிரதமர் நரேந்திர மோடியோ, பாஜக கட்சியினரோ குதிரைபேரம் நடத்தி அவர்களை மிரட்டி தங்களது பக்கம் வளைத்துவிடுவார் என்பது காங்கிரசாரின் அச்சம்.
குஜராத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 8ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பாஜக கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி ஆகியோர் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் சார்பில் அகமது பட்டேல் களமிறங்குகிறார். பட்டேல் வெற்றி பெற வேண்டுமானால் கண்டிப்பாக 44 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுகளும் தேவை. எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் குறைந்தால் கூட அவர்களது வெற்றி கேள்விக்குறி ஆகிவிடும். இதை தடுக்கவே கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்க வைத்தது போலவே, குஜராத்தை விட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். காங்கிரஸ் ஆட்சி நடத்தும் கர்நாடகாவில் அவர்கள் சில நாட்கள் தங்க வைக்கப்படுவதே பாதுகாப்பு என்று கருதி அந்த கட்சி இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>