குஜராத் கடற்பகுதியில் ரூ. 3,500 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

201707301521265937_ICG-seizes-1500-kgs-heroin-worth-Rs-3500-crore-off-Guj_SECVPF

ஆமதாபாத்,

குஜராத் மாநில கடல் பகுதியில் வணிக கப்பலில் இருந்து இந்திய கடலோர காவல்படை 1,500 கிலோ ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்து உள்ளது. இதனுடைய மதிப்பு ரூ. 3,500 கோடி என கூறப்படுகிறது.

முதல்முறையாக இதுபோன்று அதிகளவு போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இந்திய கடலோர காவல்படை, புலனாய்வு பிரிவு, போலீஸ், சுங்கவரி, கப்பற்படை மற்றும் பிற விசாரணை முகமைகள் விசாரணை செய்து வருகிறது.

பாதுகாப்பு துறை பிஆர்ஒ அபிஷேக் மதிமான் விடுத்து உள்ள அறிக்கையில், “ உளவுப்பிரிவு தகவல்களை கொண்டு இந்திய கடலோர காவல்படை போலீஸ் கப்பல், குறிப்பிட்ட வணிக கப்பலை மறித்து சோதனையிட்ட போது, போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது,” என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கப்பல் இப்போது ஆழம் உள்ள பகுதியில் நிற்பதால் மேற்கண்ட தகவல்கள் வெளியாகவில்லை. இச்சம்பவம் தொடர்பாக சிறப்பு நடவடிக்கைகள் குழு, இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் ஆய்வு செய்யும் சிறப்பு கூட்டம் மாலை நடக்கிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>