குஜராத்தில் பாஜகவுக்கு எதிரான அலை வீசுகிறது: ராகுல் காந்தி

|

நரேந்திர மோடி எனது அரசியல் எதிரி. அவர் என்னைப் பற்றி பல்வேறு தவறான விஷயங்களைப் பேசுகிறார். ஆனால் அவர் இந்த நாட்டின் பிரதமர். எனவே அவரைப் பற்றி என் வாயில் இருந்து எந்தவொரு தவறான வார்த்தையும் வராது. நாட்டின் அரசியல் தற்போது அருவருக்கத்தக்கதாக மாறிவிட்டது. இதை மாற்ற நான் போராடுவேன்.

நரேந்திர மோடி எனது அரசியல் எதிரி. அவர் என்னைப் பற்றி பல்வேறு தவறான விஷயங்களைப் பேசுகிறார். ஆனால் அவர் இந்த நாட்டின் பிரதமர். எனவே அவரைப் பற்றி என் வாயில் இருந்து எந்தவொரு தவறான வார்த்தையும் வராது. நாட்டின் அரசியல் தற்போது அருவருக்கத்தக்கதாக மாறிவிட்டது. இதை மாற்ற நான் போராடுவேன்.

குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான அலை காணப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி தெரிவித்தார். அங்கு காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.

குஜராத்தில் இரண்டாம் கட்டத் தேர்தல் பிரசாரத்துக்காக முகாமிட்டுள்ள ராகுல் காந்தி, ஆமதாபாதில் உள்ள ஜகந்நாதர் கோயிலில் செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தார். இதனிடையே, அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:
இந்த மாநிலத்தில் தலித்துகள் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று நினைக்கின்றனர். அவர்களுக்கு நிலம், வேலைவாய்ப்பு, கல்வி என்று எதுவுமே இல்லை. உனா பகுதியில் தலித் இளைஞர் தாக்கப்பட்டார். மோடி அது குறித்து எதுவும் கூறாமல் மௌனம் சாதித்தார். தலித்துகளின் பெயரில் ஏராளமான சட்டங்கள் இருந்தாலும் அவற்றை அமல்படுத்துவது யார்?
இந்தத் தேர்தலில்தான் ஊழல் பற்றியும், விவசாயிகள் பற்றியும் பிரதமர் மோடி முதல் முறையாகப் பேசாமல் இருந்துள்ளார். மாநிலத்தில் ஆளுங்கட்சியான பாஜகவுடன் படேல்கள், இதர பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், விவசாயிகள் என சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் கோபத்தில் உள்ளனர். மக்களின் மனப்போக்கில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இங்கு பாஜகவுக்கு எதிரான அலை காணப்படுகிறது. சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும்.
பாஜக தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக மோடி மௌனமாக இருப்பது ஏன்? ரஃபேல் ஜெட் போர் விமானங்களின் கொள்முதலிலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.
பாகிஸ்தான், குஜராத் தேர்தலில் தலையிடுவதாக மோடி கூறியுள்ளார். இந்த விஷயத்தில் எனது நிலைப்பாடு ஆரம்பத்தில் இருந்தே தெளிவாக உள்ளது. மோடிதான் இந்த நாட்டின் பிரதமராக இருக்கிறார்.
மணிசங்கர் அய்யர் ஒரு கருத்தைத் தெரிவித்தார். அதை சகித்துக் கொள்ள முடியாது என்பதை நான் தெளிவுபடுத்தினேன். இந்த விஷயத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதை நீங்கள் கண்டீர்கள். ஆனால், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றி மோடி கூறியதை ஏற்க முடியாது. மன்மோகன் சிங்கும் இந்த நாட்டின் பிரதமர் பதவியை வகித்துள்ளார். இந்த நாட்டுக்கு சேவையாற்றியுள்ளார். தியாகங்களைப் புரிந்துள்ளார்.
நரேந்திர மோடி எனது அரசியல் எதிரி. அவர் என்னைப் பற்றி பல்வேறு தவறான விஷயங்களைப் பேசுகிறார். ஆனால் அவர் இந்த நாட்டின் பிரதமர். எனவே அவரைப் பற்றி என் வாயில் இருந்து எந்தவொரு தவறான வார்த்தையும் வராது. நாட்டின் அரசியல் தற்போது அருவருக்கத்தக்கதாக மாறிவிட்டது. இதை மாற்ற நான் போராடுவேன்.
காங்கிரஸ் தலைவராக அதிகாரபூர்வமாகப் பொறுப்பேற்ற பிறகு என்ன முன்னுரிமைப் பணி என்ன? என்று கேட்கிறீர்கள். அரசியல் என்பது அன்பின் மூலம் நடத்தப்பட வேண்டும் என்ற காங்கிரஸின் சித்தாந்தத்தை நாட்டில் பரப்புவதற்கு நான் விரும்புகிறேன். நான் கோயில்களுக்குச் செல்வது குறித்து சிலர் (பாஜகவினர்) கேள்வி எழுப்புகிறார்கள். இந்த மாநிலத்தின் நலனுக்காக கோயில்களில்பிரார்த்தனை செய்வது தவறா?
மோடி இங்குள்ள சபர்மதி நதிக் கரையில் இருந்து மேஹ்சானா மாவட்டத்துக்கு கடல் விமானம் மூலம் பயணம் மேற்கொண்டுள்ளார். இது குஜராத்தின் முக்கிய பிரச்னைகளில் இருந்து திசைதிருப்பும் முயற்சியாகும்.
படேல்களுக்கு எவ்வாறு இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் அளிக்கும் என்பதற்கு, எங்கல் கட்சியின் தேர்தல் அறிக்கையில் அதற்கு பதில் உள்ளது என்றார் ராகுல் காந்தி.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>