குஜராத்தில் இடஒதுக்கீடு கோரி நடந்த போராட்டத்தை பயன்படுத்தி ஹர்திக் படேல் சொத்து குவிப்பு: முன்னாள் கூட்டாளிகள் குற்றச்சாட்டு

ஹர்திக் படேலுக்கு நெருக்கமாக இருந்து போராட்டத்தை நடத்திய சிராக் படேல், கேதன் படேல் இருவரும்; ஹர்திக் படேல்கடந்த ஓராண்டில் இட ஒதுக்கீடு போராட்டத்தை பயன்படுத்தி  கோடீஸ்வரராகி விட்டார் என்று கூறியுள்ளனர்.

ஹர்திக் படேலுக்கு நெருக்கமாக இருந்து போராட்டத்தை நடத்திய சிராக் படேல், கேதன் படேல் இருவரும்; ஹர்திக் படேல்கடந்த ஓராண்டில் இட ஒதுக்கீடு போராட்டத்தை பயன்படுத்தி கோடீஸ்வரராகி விட்டார் என்று கூறியுள்ளனர்.

அகமதாபாத்: குஜராத்தில் படேல் இனத்தவருக்கு இடஒதுக்கீடு கோரி நடந்த போராட்டத்தை பயன்படுத்தி, ஹர்திக் படேல் கோடிக்கணக்கில் சொத்துக்களை குவித்திருக்கிறார் என்று அவரது முன்னாள் கூட்டாளிகள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். குஜராத்தில் பட்டிதர் எனப்படும் படேல் இனத்தவருக்கு இடஒதுக்கீடு அளிக்க கோரி, கடந்த ஆண்டு பெரிய போராட்டம் நடந்தது. அப்ேபாது அந்த போராட்டத்தை தலைமையேற்று நடத்தியவர் 23 வயது இளைஞர் ஹர்திக் படேல். பல நாட்களாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் வன்முறை சம்பவங்கள், போலீஸ் தடியடி போன்றவை ஏற்பட்டன. பலர் உயிரிழந்தனர். ஹர்திக் படேல் மீது தேச துரோக வழக்குகள் பாய்ந்தன. அவர் சிறைக்கு சென்று சமீபத்தில்தான் ஜாமீனில் வெளிவந்தார்.

இந்நிலையில், இந்த போராட்டங்களை பயன்படுத்தி ஹர்திக் படேல் கோடிக்கணக்கில் சொத்துகளை குவித்துள்ளதாக அவரது முன்னாள் கூட்டாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆரம்ப காலத்தில் ஹர்திக் படேலுக்கு நெருக்கமாக இருந்து போராட்டத்தை நடத்திய சிராக் படேல், கேதன் படேல் ஆகியோர் தற்போது அவருடன் இல்லை. அவர்கள் ஹர்திக் படேலுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி ஒரு கடிதம் அனுப்பினர். அதில், கடந்த ஓராண்டில் இட ஒதுக்கீடு போராட்டத்தை பயன்படுத்தி ஹர்திக் படேல் கோடீஸ்வரராகி விட்டார் என்று கூறியுள்ளனர். மேலும், ஹர்திக் படேலின் நோக்கம் அரசியல் தலைவராக வேண்டும் என்பதுதான். மிகவும் சுயநலத்துடனும், சொத்து சேர்க்கும் ஆசையுடனும் செயல்பட்டதன் மூலம் படேல் இனத்தவரின் போராட்டத்திற்கு களங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளார் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.
‘‘
போராட்டத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினர் எந்த உதவியும் கிடைக்காமல் தவித்து வரும் வேளையில், ஹர்திக்கும், அவருக்கு நெருக்கமானவர்களும் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு உதவுவதற்காக கொடுப்பதாக கூறி திரட்டப்பட்ட நிதியில் ஹர்திக்கும், அவரது மாமா விபுல் பாயும் சொகுசு கார்களை வாங்கி அனுபவிக்கின்றனர். சிறைக்கு சென்று விட்டு வெளியே வருபவர்கள் அதன்பின்னர் வாழ்வதற்கே வழியில்லாமல் கஷ்டப்படுவார்கள். ஆனால், ஹர்திக் படேல் சிறையில் இருந்து வந்ததும் கோடீஸ்வரராக மாறி விட்டார்’’ என்று அவர்கள் கூறியுள்ளனர். தற்போது இந்த விவகாரம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>