கீழடி அகழாய்வு பணிமத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் நன்றி

jakkammanews

சென்னை: கீழடி அகழாய்வு பணிகளை மீண்டும் தொடங்க உத்தரவிட்ட மத்திய கலாசார அமைச்சருக்கு நன்றி தெரிவித்து. திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். நேற்று வெளியிட்ட அறிக்கையில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:
தமிழ்ச் சங்கம் அமை த்து, தமிழை வளர்த்த பெருமைமிக்க மதுரைக்கு அருகில் உள்ள சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய தொல்லியல்துறை மூலம் நடத்தப்பட்ட அகழாய்வில் தமிழக நாகரிகத்தின் அடையாளத்தை உணர்த்தும் வகையில் 5300க்கும் மேற்பட்ட பல அரிய தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.

தமிழர்களின் நாகரிகம் பற்றிய மிக முக்கியமான தகவல்கள் கிடைத்த அந்த கீழடி அகழாய்வு பணியை திடீரென்று மத்திய அரசு பாதியில் நிறுத்தி விட்டது என்று வெளிவந்த செய்தியின் அடிப்படையில் ஜனவரி 6ம் தேதி மத்திய கலாச்சார துறை அமைச்சர் மகேஷ் சர்மாவுக்கு கடிதம் எழுதி “நிறுத்தப்பட்ட அகழாய்வு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தேன். அந்த கடிதத்தை திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா அவர்களிடம் கொடுத்து அனுப்பி நேரடியாக மத்திய அமைச்சரிடம் கொடுத்து இந்த கோரிக்கையை வலியுறுத்த சொன்னேன்.

அப்போதே, “இந்த கோரிக்கை நிச்சயம் பரிசீலிக்கப்படும்” என்ற உறுதியை மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் அளித்திருந்தார். அவர் கொடுத்த வாக்குறுதியின்படி, கோரிக்கையை ஏற்று கீழடி அகழாய்வு பணிகளை மீண்டும் தொடங்க உத்தரவிட்டதற்கு மத்திய கலாச்சார அமைச்சருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>