கிரானைட் குவாரிகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

download

மேலூர்: மேலூர் பகுதியில் உள்ள கிரானைட் குவாரிகளில் கலெக்டர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிரானைட் குவாரிகள் பல்லாயிரம் கோடி முறைகேட்டில் ஈடுபட்டதால் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. கிரானைட் அதிபர்கள் மீதான நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் மேலூர், மதுரை கோர்ட்களில் நடந்து வருகிறது. சீலிட்ட குவாரிகளில் நேற்று முன்தினம் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கீழையூர். கீழவளவு, இ.மலம்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள பிஆர்பி கிரானைட், தீபா கிரானைட், டாமின் குவாரிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வில் மதுரை கலெக்டர் வீரராகவராவ், புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையாளர் பழனிச்சாமி, கனிம வளத்துறை துணை இயக்குநர் சிற்றரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்கனவே பலமுறை ஆய்வு செய்து, வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில் அதிகாரிகள் மீண்டும் கிரானைட் குவாரிகளை ஆய்வு செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>