காஷ்மீர் விவகாரம்; அனைத்து தரப்பினருடன் பேச்சு வார்த்தையை உறுதி செய்க: அனைத்துக் கட்சி குழு

அனைத்துக் கட்சிக் குழு தனது அறிக்கையில், பேச்சு வார்த்தை, உரையாடல் மூலம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு என்று காஷ்மீர் மக்களிடம் முறையீடு செய்துள்ளது. மேலும், “தேசிய இறையாண்மையில் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ளப்பட மாட்டாது” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் சுமுக தீர்வு காண அனைத்து தரப்பினருடனும் பேச்சு வார்த்தையை மத்திய அரசும், காஷ்மீர் மாநில அரசும் உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.

போராட்டங்களின் போது காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்று இந்தக் குழு மேலும் வலியுறுத்தியுள்ளது.

அனைத்துக் கட்சிக் குழு தனது அறிக்கையில், பேச்சு வார்த்தை, உரையாடல் மூலம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு என்று காஷ்மீர் மக்களிடம் முறையீடு செய்துள்ளது. மேலும், “தேசிய இறையாண்மையில் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ளப்பட மாட்டாது” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், வணிக நிலையங்கள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பி சகஜமாக புழங்கும் சூழலை உருவாக்க மத்திய அரசும், காஷ்மீர் அரசும் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவருக்கும் பாதுகாப்பு அளிப்பதும் அரசின் கடமையாகும், என்று தங்கள் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.

மோதலில் 4 பேர் காயம்:

தெற்கு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் ஆர்பாட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட சண்டையில் 4 பேர் காயமடைந்துள்ளனர். ஆர்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு மற்றும் பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதால் 4 பேர் காயமடைந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த ஜூலை 8-ம் தேதி புர்ஹான் வானி என்கவுன்ட்டரைத் தொடர்ந்து காஷ்மீரில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அதே நிலை இன்று வரை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதுவரை 73 பேர் கலவரங்களுக்குப் பலியாகியுள்ளனர், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>