காஷ்மீர் விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரல்: பிரதமர் மோடி வேண்டுகோள்

 புதுடெல்லி: காஷ்மீர் விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரல் எழுப்ப வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


புதுடெல்லி: காஷ்மீர் விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரல் எழுப்ப வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுடெல்லி: காஷ்மீர் விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரல் எழுப்ப வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாதந்தோறும் கடைசி ஞாயிறன்று, ‘மன் கி பாத்’ (மனதிலிருந்து பேசுகிறேன்) என்ற தலைப்பின் கீழ், வானொலியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். அவர் இன்று நிகழ்த்திய உரை வருமாறு: விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதற்கான நேரம் தற்போது வந்துள்ளது. விளையாட்டுகளுக்கு செயல் ஊக்கம் தேவை என்பதால் மக்கள் விளையாட்டுக்கு நல்லாதரவை அளிக்க வேண்டும். ஹாக்கி ஜாம்பவான் தயான்சந்தின் பிறந்ததினம் நாளை வருகிறது. அவருடைய பிறந்தநாள், தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படும். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்து, சாக்‌ஷி ஆகியோர் நமக்கு பெருமை தேடி தந்துள்ளனர். தீபா கர்மாகர், அபினவ் பிந்த்ரா, விகாஷ் கிருஷ்ணா உள்ளிட்டோர் ரியோ ஒலிம்பிக்கில் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். விளையாட்டுக்கென அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் மூலம் விளையாட்டுகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

செப்டம்பர் 5ல் ஆசிரியர் தினம் வருகிறது. தாயை போன்று நம்முடைய வாழ்க்கையில் அக்கறை செலுத்துபவர்கள் ஆசிரியர்கள். மாணவர்களின் முன்னேற்றத்துக்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்களாக ஆசிரியர்கள் உள்ளனர். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்த் சிறந்த ஆசிரியராக விளங்குகிறார். விநாயகர் சதுர்த்தி, துர்கா பூஜை இன்னும் சில நாட்களில் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத களிமண்ணால் ஆன சிலைகளையே பயன்படுத்த வேண்டும். ரசாயன கலவைகளை கொண்டு சிலைகள் தயாரிப்பதை தவிர்க்க வேண்டும்.

ஏழைகளுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த அன்னை தெரசாவுக்கு செப்டம்பர் 4ம் தேதி புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது. வாடிகனில் நடைபெறும் இவ்விழாவில் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் பங்கேற்க உள்ளனர். தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் குறும்படங்களுக்கான போட்டிகளில் அதிகளவில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும். சட்டீஸ்கர் மாநிலத்தில் 1700 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், வீட்டில் கழிப்பறை கட்டவேண்டுமென தங்களது பெற்றோருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இது பாராட்டுக்குரியது.

கர்நாடகத்தை சேர்ந்த 16 வயது மாணவி கழிவறை கட்டித்தர வேண்டுமென கோரிக்கை வைத்தார். ரூ.18 ஆயிரம் மதிப்பிலான கழிவறை 7 நாட்களில் கட்டித்தரப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் அனைவரும் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்து செயல்பட வேண்டும். காஷ்மீரில் ஏற்படும் ஒவ்வொரு உயிரிழப்பும் நமக்கு ஏற்படும் இழப்பாகும். எனவே, காஷ்மீர் விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரல் எழுப்ப வேண்டும். காஷ்மீரில் இளைஞர்களை கல்வீச்சுக்கு தூண்டிவிடும் சக்திகள் கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>