காஷ்மீர் ; வன்முறையில் 63பேர் உயிரிழந்தனர் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

காஷ்மீரில் பயங்கரவாதி பர்கான் வானி கொல்லப்பட்டதை தொடர்ந்து பிரிவினைவாதிகள் போராட்டம் காரணமாக அங்கு அமைதியின்மை நிலவி வருகிறது. போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் இரு போலீசார் உள்பட 58 பேர் பலியாகினர்.

காஷ்மீரில் பயங்கரவாதி பர்கான் வானி கொல்லப்பட்டதை தொடர்ந்து பிரிவினைவாதிகள் போராட்டம் காரணமாக அங்கு அமைதியின்மை நிலவி வருகிறது. போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் இரு போலீசார் உள்பட 58 பேர் பலியாகினர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் இன்று பாதுகாப்பு படையினர் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தில் நீடித்துவரும் வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 63ஆக உயர்ந்தது.

காஷ்மீரில் பயங்கரவாதி பர்கான் வானி கொல்லப்பட்டதை தொடர்ந்து பிரிவினைவாதிகள் போராட்டம் காரணமாக அங்கு அமைதியின்மை நிலவி வருகிறது. போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் இரு போலீசார் உள்பட 58 பேர் பலியாகினர். 1000-த்திற்கும் அதிகமானோர் காயம் அடைந்து உள்ளனர். கடந்த மாதம் 9-ம் தேதியில் இருந்து அங்கு அமைதியின்மை நிலவி வருகிறது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள எல்லைக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்ய பாகிஸ்தான் தொடர்ச்சியாக முயற்சி செய்து வருகிறது.

நேற்று பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டதில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஸ்ரீநகர் மற்றும் ஆனந்த்நாக் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பள்ளத்தாக்கின் பிற பகுதிகளிலும் தொடர்ந்து தடை உத்தரவு அமலில் உள்ளதால் 39-வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

“ஒட்டுமொத்த ஸ்ரீநகர் மாவட்டம் மற்றும் ஆனந்த்நாக் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது, சட்டம் ஒழுங்கை காக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது,” என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து மூடியே காணப்படுகிறது. பிரிவினைவாதிகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ள காரணத்தினால் மாநிலத்தில் அரசு போக்குவரத்து சேவை ரத்துசெய்யப்பட்டு உள்ளது. பள்ளத்தாக்கு முழுவதும் தொடர்ந்து இன்டர்நெட் மற்றும் செல்போன் சேவை தடைசெய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில் பத்காம் மாவட்டத்தில் உள்ள மாகாம் பகுதியில் கற்களை வீசி போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஐவர் உயிரிழந்தனர், மாநிலத்தில் நீடித்துவரும் வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்து உள்ளது.

மாகாம் பகுதியில் குரூப்பாக வந்த இளைஞர்கள் சி.ஆர்.பி.எப். வாகனத்தை நோக்கி கற்களை வீசினர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் எடுத்த எதிர்நடவடிக்கையில் 5 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பலர் காயம் அடைந்தனர் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். உயிரிழந்தவர்களில் மூவர் ஜாவித் அகமது, மன்சூர் அகமது மற்றும் முகமது அஷ்ரப் என்று அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே மாநிலத்தில் நிலவிவரும் அமைதியின்மை நிலையை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார்.

புதுடெல்லியில் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை செயலாளர் ராஜிவ் மகரிஷி, உளவுத்துறை மற்றும் பிற பாதுகாப்பு முகமைகளின் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>