காஷ்மீர் பிரச்னைக்கு வளர்ச்சியால் மட்டுமே தீர்வு காண முடியாது :மோடிக்கு உமர் பதிலடி

காஷ்மீர் பிரச்னைக்கு வளர்ச்சியால் மட்டுமே தீர்வு காண முடியாது :மோடிக்கு உமர் பதிலடி

காஷ்மீர் பிரச்னைக்கு வளர்ச்சியால் மட்டுமே தீர்வு காண முடியாது :மோடிக்கு உமர் பதிலடி

ஸ்ரீநகர்: காஷ்மீரின் பிரச்னைக்கு வளர்ச்சியின் மூலமாக மட்டுமே தீர்வு காண முடியாது என அம்மாநில முன்னாள் முதல்வர் உமர் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசம் பாப்ராவில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், ‘‘மத்திய அரசு, மெகபூபா அரசுடன் இணைந்து வளர்ச்சியின் மூலமாகவே காஷ்மீரின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணும்’’ என்று கூறினார். ஆனால், இதற்கு முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா கருத்து தெரிவித்தார். உமர் அப்துல்லா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘காஷ்மீர் பிரச்னை வளர்ச்சிப் பணிகளில் ஏற்பட்ட தேக்க நிலையால் உருவானது அல்ல என்பதை பிரதமர் மோடி நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். வளர்ச்சியின் மூலமாக மட்டுமே காஷ்மீரில் நிலவி வரும் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியாது. காஷ்மீரின் அனைத்து பிரச்னைகளுக்கும் நிர்வாக குறைபாடுதான் காரணம் என மோடி தவறாக புரிந்து கொண்டுள்ளார்.

காஷ்மீரில் நிலவி வரும் சூழல் வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்னையும் அல்ல. இது முழுக்க முழுக்க அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட வேண்டிய ஒன்றாகும்’’ என்று தெரிவித்துள்ளார். அதே போல் அவரதுதேசிய மாநாட்டு கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பற்றி எரிந்து கொண்டிருக்கும் காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடியின் இந்த பதில் மட்டுமே போதுமானதல்ல. உடனடியாக செயல்பட வேண்டிய தேவை உள்ளது. வார்த்தையை செயலாக மத்திய அரசு மாற்றி காட்ட வேண்டும். காஷ்மீரை பற்றி பேசியது வரவேற்க கூடியதுதான் என்ற போதிலும், இதை முன்பே பேசியிருக்க வேண்டும்’’ என்றும் சாடியுள்ளது.

கடந்த மாதம் 8ம் தேதி ஹிஸ்புல் தீவிரவாதி பர்கான் வானி கொல்லப்பட்டதையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காஷ்மீரில் கலவரங்கள் நடைபெற்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>