காஷ்மீர் பிரச்சினை மீதான மக்களவை தீர்மானத்துடன் மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு

i3

காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18-ம் தேதி தொடங்கியது. இக்கூட்டத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று மக்களவையில் காஷ்மீர் பிரச்சினை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவை கூடியவுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காஷ்மீர் பிரச்சினை குறித்து அவையில் தீர்மானம் நிறைவேற்றுமாறு வலியுறுத்தினார்.

காஷ்மீர் பிரச்சினை மீது தீர்மானம் நிறைவேற்ற அரசு தயாராக இருப்பதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இதனையடுத்து மக்களவையில் ஒருமனதாக காஷ்மீர் மீது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த தீர்மானத்தில், காஷ்மீரில் 35 நாட்களாக நீடித்து வரும் ஊரடங்கு உத்தரவு, கலவரம் குறித்து அரசு தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் உயிர் பலி குறித்து அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இந்தியாவின் ஒற்றுமையை பேணுவதிலும், ஒருமைப்பாட்டை கடைபிடிப்பதிலும், தேசிய பாதுகாப்பிலும் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நிறைவுரை ஆற்றினார். பின்னர் மக்களவையில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டு தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல் மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>