காஷ்மீரில் வன்முறையை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை: பாதுகாப்பு படையினருக்கு ராஜ்நாத் சிங் உத்தரவு

 

daily_news_8053203821183

 

 

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் வன்முறையை தூண்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி பாதுகாப்பு படையினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். காஷ்மீரில் 2 மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் பதற்றமான சூழ்நிலை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை இயக்குனர் மற்றும் உள்துறை செயலாளருடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது காஷ்மீரில் மீண்டும் அமைதியை நிலைநாட்டவும், பள்ளி, கல்லூரிகளை திறக்கவும் தேவையான நடவடிக்கைகளை பாதுகாப்பு படையினர் மேற்கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக வன்முறையை தூண்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் தீவிரவாத ஊக்குவிப்பு நடவடிக்கைகளை தோழுறித்து காட்டுவதற்காக ரஷ்யா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு ஒருவார இடைவெளியில் பயணம் மேற்கொள்ளவும் ராஜ்நாத் சிங் முடிவு செய்துள்ளார். அப்போது எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளில் பாகிஸ்தான் நேரடியாக ஈடுபட்டு வருவதை இருநாட்டு அரசுகளுக்கும் அவர் தெளிவாக விளக்குவார் என உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்தியாவில் ஐஎஸ் தீவிரவாத இயக்கம் காலூன்றி வளர உதவிபுரிவதை சுட்டிக்காட்டும் ராஜ்நாத் சிங், தீவிரவாதத்துக்கு எதிராக கூட்டாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் இருநாட்டு அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதன்படி வரும் 18ம் தேதி ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்ளும் ராஜ்நாத் சிங், அந்நாட்டு உள்துறை அமைச்சர் விளாடிமிர் உடன் பேச்சு நடத்துவார். 5 நாட்கள் அங்கு தங்கியிருக்கும் அவர் இருதரப்பு விசயங்கள் பற்றியும் விவாதிப்பார். பின்னர் 26ம் தேதி 7 நாள் பயணமாக ராஜ்நாத் சிங் அமெரிக்கா செல்கிறார். ராஜ்நாத் சிங்கின் இருநாட்டு பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>