காஷ்மீரில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது.

காஷ்மீரில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது.

காஷ்மீரில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது.

ஸ்ரீநகர்: காஷ்மீரில் வன்முறைச் சம்பவங்கள் ஓய்ந்தாலும் 13வது நாளாக இன்றும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. சில மாவட்டங்களில் இயல்புநிலை திரும்பிய நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டன. பத்திரிகைகள் வெளியாயின. காஷ்மீரில் பதுங்கியிருந்த ஹிஸ்புல் முஜாகிதின் அமைப்பை சேர்ந்த கமாண்டர் பர்கான் வானி உள்ளிட்ட 3 பேர் கடந்த 8ம் தேதியன்று ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் அங்கு பெரிய அளவில் வன்முறை வெடித்தது. 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.வன்முறையால் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டது. காஷ்மீர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. செல்போன் இணையதள சேவை முடக்கி வைக்கப்பட்டது. பிரிவினைவாதிகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்த நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.

காஷ்மீரில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது. வன்முறைச் சம்பவங்கள் ஓய்ந்து வருகின்றன. எனினும், 13வது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. இந்நிலையில், பாரமுல்லா, பண்டிபோரா, பத்காம், கண்டெர்பால் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மற்ற மாவட்டங்களில் பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. கடந்த சனிக்கிழமை சில பத்திரிகைகளுக்கு அதிகாரிகள் தடை விதித்ததால், பத்திரிகைகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டன. அரசு வருத்தம் தெரிவித்து பேசியதால், இன்று முதல் பத்திரிகைகள் வெளியாகத் தொடங்கியது.

காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பினாலும், அசம்பாவிதங்களை தடுக்க இணையதள சேவை தொடர்ந்து முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இணையதள முடக்கத்தால் தங்களுடைய வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் வரி செலுத்த கால அவகாசத்தை நீட்டிக்கும்படியும் காஷ்மீர் மாநில நிதியமைச்சர் ஹாசேப் திரபுவிடம், வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதற்கிடையே, காஷ்மீர் நிலைமை குறித்து விவாதிப்பதற்காக இன்று அனைத்து கட்சிக் கூட்டத்தை முதல்வர் மெகபூபா முப்தி கூட்டியிருந்தார். முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி இக்கூட்டத்தை புறக்கணித்தது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>