காவேரிகரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

காவேரிகரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

காவேரிகரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

மேட்டூர்: கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கொட்டி வரும் கனமழை எதிரொலியாக மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் தகவல் படி, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜ சாஹர், கபினி அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

துங்கபத்திரா நதியின் நீர்பிடிப்பு பகுதியிலும் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அணைகளில் இருந்து திடீரென தண்ணீர் திறக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே வெள்ளத் தடுக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மேட்டூர் பொதுபணித்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைதொடர்ந்து நேற்று இரவு மேட்டூர் ஆட்சியர் மேகநாதன் தலைமையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேட்டூர் அணையில் 20 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. அணையில் இன்னும் 70 டிஎம்சி தண்ணீரை தேக்க முடியும். எனவே மேட்டூருக்கு கீழே இருக்கும் பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் மிக குறைவு. சேலம், தருமபுரி மாவட்டங்களில் காவிரி கரையோரம் வசிப்போருக்கு தண்டோரா மூலம் எச்சரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>