காவிரி விவகாரத்தை உச்சநீதிமன்றம் மறுஆய்வு செய்ய வேண்டும் : மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை

2016-21-9-17-11-26bm

பெங்களூரு: காவிரியில் மேலும் 6,000 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்க உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் காரணமாக மாண்டியாவில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. ஏற்கனவே தண்ணீர் திறக்கப்பட்டதை கண்டித்து விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக மாண்டியா மாவட்டத்தில் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியது. மாண்டியா விவசாயிகள் மண் சாப்பிடுவது, இலவசமாக கொள் தருவது, காலணியை தலையில் வைத்து எதிர்ப்பு தெரிவிப்பது என நாள்தோறும் விதவிதமான போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று உச்சநீதிமன்றம் புதிதாக 6,000 கனஅடி நீர் திறக்க உத்தரவிட்டதை கண்டித்து மாண்டியா, மைசூசுரு, சாம்ராஜ் நகர் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மாண்டியாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 70 சதவீதம் அளவிற்கு கடைகளும் மூடப்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாண்டியாவில் துணை ராணுவப்படை, அதிரடிப்படை என 3,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே உச்சநீதிமன்றம் காவிரி நீர் விவகாரத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என ஆளும் காங்கிரஸ் கோரியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தண்ணீர் திறப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் அனைத்து அம்சங்களையும் ஆராயவில்லை என நினைப்பதாக குறிப்பிட்டார். உச்சநீதிமன்றம் இவ்விவகாரத்தை மறுஆய்வு செய்ய கேட்டுக் கொண்ட அவர், கர்நாடக வழக்கறிஞர்களும் சட்ட ரீதியாக அணுகுவது குறித்து ஆராய வேண்டும் என்றார். கர்நாடக மக்கள் குடிநீருக்கே மிகவும் கஷ்ட்டப்படுவதாக தெரிவித்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>