காவிரி விவகாரத்தில் தற்போதைக்கு பிரதமர் மோடி தலையிடுவது சாத்தியமில்லை : சதானந்த கவுடா

உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் பிரதமர் தற்போதைக்கு பிரச்சினையில் தலையிட முடியாது என்றும் சதானந்த கவுடா கூறியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் பிரதமர் தற்போதைக்கு பிரச்சினையில் தலையிட முடியாது என்றும் சதானந்த கவுடா கூறியுள்ளார்.

பெங்களூரு: காவிரி விவகாரத்தில் தற்போதைக்கு பிரதமர் மோடி தலையிடுவது சாத்தியமில்லை என்று மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கூறியுள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் காவிரி பிரச்சினையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மனம்போன போக்கில் செயல்படுவதாக குற்றம் சாட்டினார். வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் பிரதமர் தற்போதைக்கு பிரச்சினையில் தலையிட முடியாது என்றும் சதானந்த கவுடா கூறியுள்ளார்.

உச்சநீதிமன்ற உத்தரவு படி கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறை வெடித்ததால், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வுகாண உதவும் கோரிக்கை விடுப்பதற்காக பிரதமர் மோடியை இன்று சந்திக்க கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா முடிவு செய்துள்ளார். இதனை கர்நாடக பாஜக கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் பிரதமர் தலையிட வாய்ப்பில்லை என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கூறியுள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>