காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் கர்நாடகம் புதிய மனு தாக்கல்

2016-26-9-12-49-19j

டெல்லி: காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் புதிதாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் 6,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவில் திருத்தம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மனுவில் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க கடந்த 20-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்த இயலாது என்று கூறியுள்ளது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் தான் திறக்க இயலும் என்று கர்நாடக அரசு தனது மனுவில் கூறியுள்ளது.

முன்னதாக காவிரி நீர்ப்பாசன பகுதியின், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி, கே.ஆர்.எஸ்., அணைகளில் உள்ள நீரை கர்நாடகத்தின் குடிநீர் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த கர்நாடகா சட்டசபை மற்றும் மேல்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்லவும் திட்டமிட்டது. இதனையடுத்து 6,000கனஅடி நீர் திறந்து விடும்படி பிறப்பித்துள்ள உத்தரவை மாற்றக்கோரி, கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>