காவிரி வழக்கு இறுதி விசாரணையில் கேரள அரசின் வாதம் தொடங்கியது

201707280322005517_Cauvery-case-is-the-final-trialThe-Kerala-governments_SECVPF

புதுடெல்லி,

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர்மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை நடந்துவருகிறது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்து வரும் விசாரணையில் இதுவரை, கர்நாடக அரசு தரப்பில் மூத்த வக்கீல்கள் பாலி நாரிமன், எஸ்.எஸ்.ஜாவளி, மோகன் கர்த்தார்க்கி, ஷியாம் திவான் ஆகியோர் வாதாடினார்கள்.
இந்த வாதங்கள் அனைத்தும் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் கேரளா தரப்பு வாதங்கள் நேற்று தொடங்கின. கேரளா சார்பில் மூத்த வக்கீல் பிரதீப் குப்தா தன்னுடைய வாதங்களை எடுத்துவைத்தார். அவர் தன்னுடைய வாதத்தில் கூறியதாவது:–

1990–ம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டபோது கேரளாவும் ஒரு தரப்பாக சேர்த்துக் கொள்ளப்பட்டது. எனவே கேரளாவுக்கும் காவிரியில் இருந்து தண்ணீர் ஒதுக்கப்பட்டது. காவிரி நடுவர் மன்றத்தில் வழக்கு இருந்த போது கேரளா தங்கள் பங்குக்கு 99.8 டி.எம்சி. தண்ணீர் கேட்டது. ஆனால் நடுவர் மன்றம் வழங்கியது 30 டி.எம்.சி. மட்டுமே.
கேரளாவில் பாசனத்துக்கும் விவசாயத்துக்கும் பெருமளவில் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. நிலத்தடி நீர் மிகவும் குறைவாக உள்ளது. இதனை காவிரி உண்மையறியும் குழுவும் தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளது. நீர்ப்பாசனம் மற்றும் அணைக்கட்டு திட்டங்களுக்கு தொடர்ச்சியாக முட்டுக்கட்டை போடப்பட்டு வருகின்றன.

எனவே கேரள அரசு நடுவர் மன்றத்தில் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் 99.8 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன்தான் நாங்கள் இந்த வழக்கில் இணைந்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் தன்னுடைய வாதத்தில் கூறினார்.

பின்னர் கேரளா தரப்பு வாதத்தை மீண்டும் வருகிற 1–ந்தேதி தொடரலாம் என்று கூறிய நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>