காவிரி வழக்கில் கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்: முதல்வர் சித்தராமையா அமைச்சர்களுடன் டெல்லி விரைவு

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அதிரடி அணுகுமுறையால் அதிர்ந்து போயுள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா அமைச்சர்களுடன் டெல்லி விரைந்துள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அதிரடி அணுகுமுறையால் அதிர்ந்து போயுள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா அமைச்சர்களுடன் டெல்லி விரைந்துள்ளார்.

டெல்லி: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அதிரடி அணுகுமுறையால் அதிர்ந்து போயுள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா அமைச்சர்களுடன் டெல்லி விரைந்துள்ளார். நேற்று நடந்த வழக்கு விசாரணையில் தமிழகத்திற்கு எவ்வளவு டிஎம்சி தண்ணீர் திறந்து விட முடியும் என்பது குறித்து திங்கள் கிழமை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது அம்மாநில அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் அதிரடியால் அதிர்ந்து போயுள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா நீர்வளத்துறை அமைச்சர் எம்பி பாட்டீல், சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா மற்றும் காவிரி நீர்ப்பாசன கழக அதிகாரிகளுடன் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். அங்கு கர்நாடக அரசு வழக்கறிஞர் பாலி நாரிமனை சந்தித்து சித்தராமையா ஆலோசனை நடத்தி வருகிறார்.

காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட உத்தரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு காவிரி பிரச்சனையில் வாழு, வாழ விடு என்று அடிப்படையில் கர்நாடகம் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியது. இந்நிலையில் இவ்வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை திங்கள் கிழமை நடைபெறுகிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>