காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் திமுக உண்ணாவிரத போராட்டம்

2016-07-10-10-43-06k

தஞ்சாவூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. உச்சநீதிமன்ற உத்தரவை புறக்கணித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக விவசாயிகளுக்கு துரோகம் மத்திய பாஜக அரசை கண்டித்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தஞ்சாவூரில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தஞ்சை ரயிலடி தலைமை தபால்நிலையம் முன் நடைபெறும் இந்த உண்ணாவிரத பேராட்டத்தில் திமுக தலைமை நிலைய செயலாளர் துரைமுருகன் மற்றும் டி.ஆர்.பாலு, பொன்முடி உள்பட ஏராளமான திமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>