காவிரி பிரச்னை தொடர்பாக போராடும் விவசாய சங்க தலைவரை கொல்ல முயற்சியா?

காவிரி பிரச்னை தொடர்பாக போராடும் விவசாய சங்க தலைவரை கொல்ல முயற்சியா?

காவிரி பிரச்னை தொடர்பாக போராடும் விவசாய சங்க தலைவரை கொல்ல முயற்சியா?

திண்டிவனம்: காவிரி பிரச்னை தொடர்பாக போராடும் விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் கார் மீது கர்நாடகா பதிவெண் கொண்ட கன்டெய்னர் லாரி மோதியது. திண்டிவனம் அருகே நடந்த இந்த சம்பவத்தில் அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

சென்னையில் நடக்க உள்ள அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேற்று முன்தினம் மாலை மன்னார்குடியில் இருந்து காரில் புறப்பட்டார். நள்ளிரவில் திண்டிவனம் புறவழிச்சாலையில் கார் சென்றபோது, ரோட்டோரம் இடதுபுறம் நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி திடீரென ரோட்டின் குறுக்கே வந்தது.

இதனால் நிலைகுலைந்த கார் லாரியில் உரசி அடிப்பகுதியில் புகுந்தது. இதில் கார் பலத்த சேதமடைந்தது. பி.ஆர்.பாண்டியன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். பி.ஆர்.பாண்டியன் காவிரி பிரச்னை தொடர்பாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். மேலும் பசுமை தீர்ப்பாயத்திலும் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இந்த நிலையில் கர்நாடக பதிவெண் கொண்ட கன்டெய்னர் லாரி அவரது காரில் மோதியது விவசாய சங்க நிர்வாகிகள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ‘என்னை கொல்ல நடந்த முயற்சியாக இதை கருதுகிறேன். இதுகுறித்து தீவிரமாக விசாரிக்கும்படி டிஜிபியிடம் புகார் செய்ய இருக்கிறேன்’ என்று பி.ஆர் பாண்டியன் கூறினார். திண்டிவனம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுச்சேரியை சேர்ந்த லாரி டிரைவர் சீனிவாசனை(40) கைது செய்தனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>