காவிரி பிரச்சினைக்காக 30-ம் தேதி முழுஅடைப்பு போராட்டம் : ஆதரவு அளிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

காவிரி நிதிநீர் பிரச்சினைக்காக 30-ம் தேதி நடத்தப்பட உள்ள முழுஅடைப்பு போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவிரி நிதிநீர் பிரச்சினைக்காக 30-ம் தேதி நடத்தப்பட உள்ள முழுஅடைப்பு போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சை: காவிரி நிதிநீர் பிரச்சினைக்காக 30-ம் தேதி நடத்தப்பட உள்ள முழுஅடைப்பு போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகத்திற்கும், மத்திய அரசுக்கும், எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

போராட்டம் முழுமையாக வெற்றிப்பெற அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக போராட வேண்டும் என காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமரிடம் நேரில் சென்று முறையிட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

டெல்டா பாசன விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழக அரசும், காவிரி டெல்டா விவசாயிகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இருதினங்களுக்கு முன்பு கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்தித்த தமிழக விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தினர். ஆனால் அணைகளில் போதுமான தண்ணீர் இல்லாததால் அதற்கு வாய்ப்பில்லை என அவர் திட்டவட்டமாக கூறிவிட்டார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>