காவிரி நடுவர் மன்றம் அமைய திமுக எடுத்த நடவடிக்கைதான் காரணம்: திமுக தலைவர் கருணாநிதி

karunanidhi_2317277f

காவிரி விவகாரத்தில் ஜனநாயக அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவையே அதிமுகவும், பாரதிய ஜனதா கட்சியும் குறை கூறுவதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

காவிரி பிரச்னையில் திமுக துரோகம் செய்துவிட்டதாகவும், உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை தன்னிச்சையாக திரும்ப பெற்றுவிட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள கருணாநிதி, 1972 ஆம் ஆண்டு அனைத்துக் கட்சிக் கூட்ட முடிவின்படி உச்சநீதிமன்றத்தில் இருந்து வழக்கு திரும்பப் பெறப்பட்டதாக கூறினார்.

1971 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் தான் காவிரி பிரச்னைக்கு நடுவர்மன்றம் அமைக்க வேண்டும் என பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் கருணாநிதி தெரிவித்துள்ளார். நடுவர்மன்றத்தை அமைக்க 1975 ல் தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதை குறிப்பிட்ட அவர், திமுகவை எள்ளி நகையாடும் சிலர் காவிரிப் பிரச்னையில் துரும்பைக் கூட கிள்ளிப் போடாதவர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்‌.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>