காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வந்து 9 ஆண்டுகள் ஓடியும் என்ன பயன்?கி.வீரமணி

 காவிரி நதி என்பது கருநாடகத்திற்கு மட்டுமே உரியதல்ல; அதன் சொத்து அல்ல. இயற்கையாக பாயும் நதிகள் அந்தந்த மாநிலத்திற்குச் சொந்தம் என்றால், அப்புறம் தேசியம், தேசம் என்று இவர்கள் பேசுவதிபொருள் உண்டா?

காவிரி நதி என்பது கருநாடகத்திற்கு மட்டுமே உரியதல்ல; அதன் சொத்து அல்ல. இயற்கையாக பாயும் நதிகள் அந்தந்த
மாநிலத்திற்குச் சொந்தம் என்றால், அப்புறம் தேசியம், தேசம் என்று இவர்கள் பேசுவதிபொருள் உண்டா?

காவிரி நதிநீர் ஆணையத்தை 90 நாள்களுக்குள் அமைக்கவேண்டும்என்று நடுவர் மன்றம் தெளிவாக தீர்ப்பளித்தும்
மூன்றரை ஆண்டுகள் ஓடியும் மத்திய அரசு அமைக்காதது ஏன்?

தமிழ்நாடு அரசும் வலியுறுத்தாதது ஏன்?மற்ற மற்ற மாநிலங்களைப் பார்த்தாவது அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாததும் ஏன்?
தமிழ்நாட்டின் காவிரிப் பாசன மாவட்டங்களாகிய டெல்டா மாவட்டங்களில் சம்பா, குறுவை ஆகிய சாகுபடிகள் தொடர்ந்து,
போதிய நீர்வரத்து இன்மையால் பாலைவனங்களாகி நிற்கும் அபாயம் கண்டு, விவசாயிகள் மனமுடைந்து, ரத்தக் கண்ணீர்
வடிக்கின்றனர்! பல ஊர்களில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு மாண்டு மடியும் வேதனையான கொடுமை நாளும்
பெருகி வருகிறது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வந்து 9 ஆண்டுகள் ஓடியும் என்ன பயன்?
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்தது எப்போது தெரியுமா?2007 இல் – அதாவது இன்றைக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு. இத்தீர்ப்பினை மத்திய அரசு அதன் அதிகாரபூர்வ இதழில் (கெசட்) வெளியிடவே மிகப்பெரிய விவசாயிகள் போராட்டம்- வழக்கு – உச்சநீதிமன்றத்தின் இறுதிக் கெடு – இவைகளுக்குப் பிறகே, 6 ஆண்டுகள் கழித்து, பிப்ரவரி 19 ஆம் தேதி 2013 இல்
மத்திய அரசு வெளியிட்டது.

கிடைக்கவேண்டிய நீரின் அளவு என்ன?
இறுதித்தீர்ப்பு 2007 ஆம் ஆண்டு பிப்ரவரியில் வழங்கியுள்ளதின்படி,
ஓடிவரும் நீரின் அளவு (மொத்தம்) – 740 டி.எம்.சி.
இதில் தமிழ்நாட்டிற்குரிய பங்கு
– 419 டி.எம்.சி.
கருநாடகத்திற்குரிய பங்கு – 270 டி.எம்.சி.
கேரளாவிற்குரிய பங்கு – 30 டி.எம்.சி.
புதுச்சேரிக்குரிய பங்கு – 7 டி.எம்.சி.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க – 10 டி.எம்.சி.
நடுவர் மன்றத்தின் இந்த இறுதித் தீர்ப்புப்படி,
1. நிரந்தரமாக காவிரி நீர்ப் பங்கீடு செய்ய இரண்டு முக்கிய அமைப்புகளை அமைக்கவேண்டியது மத்திய அரசின்
கடமையாகும்.
2. காவிரி நதிநீர் ஆணைய வாரியத்திற்கு தலைவர், இரண்டு உறுப்பினர்கள் (முழு நேரம்), இரண்டு பகுதி நேர உறுப்பினர்கள்
ஆகியவர்களை மத்திய அரசே நியமிக்கவேண்டியது.
இதன் தலைவருக்குக் குறைந்தது 20 ஆண்டுகள் அனுபவமும், தலைமைப் பொறியாளராக இருந்த அனுபவமும் தேவையானது
ஆகும்.
மற்ற இருவரில் ஒருவர் நீர்ப்பாசனத் துறையில் 15 ஆண்டுகால அனுபவமும், தலைமைப் பொறியாளராகப் பணியாற்றிய
அனுபவமும் அவசியம்.
இன்னொருவர் விவசாயத் துறையிலிருந்து நியமிக்கப்படுவார்.இதற்குமேல் அதனைக் கண்காணிக்க – முறைப்படுத்தும் கமிட்டி (அதிகாரிகள்) ஒன்றும் நியமிக்கப்படல் வேண்டும்.
90 நாள்களுக்குள் நியமனம் செய்யவேண்டிய குழுக்கள் -மூன்றரை ஆண்டுகள் ஆகியும் நியமனம் செய்யப்படாதது ஏன்?
இக்கமிட்டிகளை மத்திய அரசு நியமித்து, இவை இரண்டையும் சுதந்திரமாகச் செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை மத்திய
அரசு மேற்கொள்ளவேண்டும். அப்படி நியமனம் செய்யப்பட்டுவிட்டால், காவிரி நீர்ப் பங்கீட்டுக்கு இப்படி ஒவ்வொரு
பருவந்தோறும் ‘திருவோடு’ ஏந்தி பிச்சை கேட்பது போன்று அல்லது உச்சநீதிமன்றத்திற்குச் செல்வது பெரிதும் தவிர்க்கப்படும்
சூழ்நிலை தானே உருவாகுமே!
இந்த நியமனங்களை – அரசிதழில் வெளியிடப்பட்ட அடுத்த 90 நாள்களுக்குள் அறிவிக்கை நடைமுறைக்கு வரும் என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்படி அறிவிக்கப்பட்டு மூன்றரை ஆண்டுகாலம் ஆகியும் இன்னமும் மத்திய அரசு நியமனம் செய்யவில்லையே!
பிரச்சினையின் அடிப்படை இங்குதான் உள்ளது.
மாநில அரசு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டாமாமுந்தைய பிரதமர் மன்மோகன்சிங் அரசு உறுதி அளித்தது. ஆனால், 2014 இல் அது தோற்கடிக்கப்பட்டது; பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அமைந்து இரண்டரை ஆண்டுகள் உருண்டோடி விட்டன! மாநில அரசும், போராடும் கட்சிகளும்இதனை வலியுறுத்தி, காவிரி நீர் ஆணையத்தினை அமைத்திடுமாறு அழுத்தம் கொடுத்திட வேண்டாமா? தமிழக ஆளும்கட்சியான அ.தி.மு.க.வுக்கு உள்ள மக்களவை உறுப்பினர்கள் 37; அதேபோல மாநிலங்களவையிலும் 11 பேர் உள்ளனரே!துணை சபாநாயகரே அ.தி.மு.க. உறுப்பினர். என்றாலும், இன்றுவரை இது நடைபெறவில்லையே, ஏன்? தி.மு.க. தாராளமாக ஒத்துழைப்புக் கொடுக்கும்இப்பிரச்சினையில் ஒத்துழைக்க தி.மு.க.வுக்கும் மாறுபட்ட கருத்தே இருக்க முடியாது!
கருநாடகத்தில், கேரளத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் கூட்டப்பட்டு முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அனைத்துக் கட்சி- சட்டமன்றத்திற்கு வெளியே உள்ள கட்சிகள், அமைப்புகள், விவசாயிகளின் பிரதிநிதிகள் – இவர்களை அழைத்து அனைத்துக்
கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள் என்று கேட்டுக் கொண்டே இருந்தாலும் – தமிழக அரசு அதனைப் பொருட்படுத்துவதே
இல்லை. (இதனை வற்புறுத்தாததலைவர்களோ,விவசாயிகளின்பிரதிநிதிகளோயாரும்இல்லைஎல்லோரும்‘கூவி’அலுத்துவிட்டனர்!) தமிழக அரசின் காதுகளோ கேளாக் காதுகளாகி விட்டன! வீண் வறட்டுப் பிடிவாதம்! ஜீவாதாரப் பிரச்சினையில்இப்படி ஒரு சார்பு!இதனால்தான் நேற்று (2.9.2016) கருநாடக அரசு சார்பில் வாதாடிய வழக்குரைஞர்,(disress formula) இடர்ப்பாடு காலங்களில்எப்படி தண்ணீர் தருவது என்று கூறப்படவில்லை என்று முழுப் பூசணியைச் சோற்றில் மறைக்க முயற்சித்துள்ளார்!
‘‘காவிரி நதியில் இடர்ப்பாடு காலங்களில், நீர்வரத்து குறைவாக இருக்கும் என்பதால், அதற்கேற்ப நீரின் அளவை கேரளம்,
கருநாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி இடையே குறைத்துக் கொள்ளலாம் என்று தெளிவாகவே கூறப்பட்டுள்ளனவே!
பத்து விழுக்காடு பருவ மழை குறைவு என்றால், கருநாடகம் காவிரி நீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நீரில் 5
விழுக்காடு மட்டுமே குறைத்து விடுவித்திருக்கவேண்டும். தரவே முடியாது என்று அறவே அடம்பிடித்து கருநாடக முதல்வர்
போன்றவர்களே கூறுவது எவ்வகையிலும் சட்டபூர்வமாக – நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி சற்றும் ஏற்கத்தக்கதல்ல.2016 ஜூன் -10 டி.எம்.சி.; 2016 ஜூலை -34 டி.எம்.சி.; 2016 ஆகஸ்ட் -50 டி.எம்.சி.தமிழ்நாட்டிற்கு திறந்து விட்டிருக்கவேண்டும்.
இதில் 5 விழுக்காடு நீர் மட்டுமே குறைத்து விடுவித்திருக்க வேண்டும்.
காவிரி நதி என்பது கருநாடகத்திற்கு மட்டுமே உரியதல்ல; அதன் சொத்து அல்ல. இயற்கையாக பாயும் நதிகள் அந்தந்த
மாநிலத்திற்குச் சொந்தம் என்றால், அப்புறம் தேசியம், தேசம் என்று இவர்கள் பேசுவதிபொருள் உண்டா?
காவிரி நீர் ஆணையம் அமைக்கப்பட்டிருந்தால், பழைய பாக்கி ஜூன் முதல் இதுவரை சரியாகத் தராத நீர்ப் பங்கீடு உள்பட
இதற்குவிடிவுஏற்பட்டிருக்குமே!‘‘உரிமைகளை’’மாற்றி‘‘சலுகைகளாக’’உச்சநீதிமன்றம்கூடகேட்கும்இந்நிலை(வாழு,வாழவிடுஎன்பதன்மூலம்)ஏற்பட்டிருக்குமா?மத்திய அரசின் அரசியல் காரணம்!
காவிரி நதிநீர் ஆணையத்தை 90 நாள்களுக்குள் அமைக்க வேண்டிய அமைப்பு மத்திய அரசு. அதுவும் குறைந்த ஆட்சி- நிறைந்த ஆளுமை திறந்த புத்தகமாக எனது ஆட்சிஇருக்கும் என்றெல்லாம் கூறி, ஆட்சிக்கு வந்த மோடி அரசும் இப்படியா தமிழ்நாட்டை வஞ்சிப்பது?மீண்டும் கர்நாடகத்தில் பா.ஜ.க. ஆட்சி ஏற்பட, இம்மாதிரி அரசியல் காரணம் இருக்குமோ என்று பலரும் யூகம் செய்யவேண்டியநிலைதானே இன்று ஏற்பட்டுள்ளது? இது நியாயந்தானா?எனவே, தும்பை விட்டு வாலைப் பிடிக்காதீர்!
தமிழக அரசும், அத்துணைக் கட்சிகளும், எம்.பி.,க்களும் உடனே ஒன்றுபட்டு காவிரி நதிநீர் ஆணைய நியமனத்தை
அமைக்க வற்புறுத்துங்கள்!

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>